இந்த உலகில் மனிதனாக பிறந்தவன் பணம், புகழோடு வாழவிரும்புகிறானோ இல்லையோ நோயற்ற வாழ்வே வாழவிரும்புகிறான்.
அந்தவகையில் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு சத்தான உணவுகளுடன் சேர்த்து உடலுக்கு பலம் தரும் உணவுகளையும் உண்ண வேண்டும்.
இதோ நீங்கள் ஆரோக்கியமான வாழ்வு வாழ்வதற்கான பலமான உணவுகள்,
பேரீச்சம்பழம்
பேரீச்சம்பழத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. எந்த காரணத்தினால் உடல் இளைத்து இருந்தாலும் பேரீச்சம்பழத்தை முறையாக உணவோடு சேர்த்து எடுத்துக்கொண்டால் மெலிந்த உடல் தேறும்.
முருங்கை
முருங்கை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டு கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் கை கால்கள் உடல் அசதிகள் நீங்கும். உடலில் பலமும் ஏறும். உடலைத் தேற்றும் நல்ல உணவாகும்.
அருகம்புல்
அருகம்புல்லை வேரோடு பறித்து சுத்தம் செய்து சிறிது தண்ணீர் சேர்த்து அம்மியில் வைத்து மை போல அரைத்துசம அளவு வெண்ணெய் கலந்து காலை மாலை என நீண்ட நாட்கள் சாப்பிட்டு வர உடலில் பலம் ஏறும்.
வெந்தயக்கீரை
வெந்தயக்கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிடுவது நல்லது. உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். கண் சம்பந்தமான கோளாறுகள் நீங்கும். பார்வை தெளிவடையும். சொரி சிரங்கை அகற்றும் மேலும் அஜீரணத்தை போக்கும்.
வில்வம்பழம்
வில்வம்பழத்தின் சதை பாகத்தை எடுத்து அத்துடன் சீனி கற்கண்டை சேர்த்து கலந்து ஒரு கோலி உருண்டை அளவு காலை மட்டும் என இரண்டு வாரங்கள் சாப்பிட்டு வந்தால் உடல் வலுபெறும்.. வில்வப்பழத்தை சாப்பிடும் காலத்தில் புளி காரம் சேர்க்க கூடாது.
வேப்பம்பூ
வேப்பம்பூ , நிலவேம்பு ஒரு அவின்ஸ், எடுத்து இரண்டையும் நன்றாக நசுக்கி அதில் 1 டம்ளர் கொதிக்கும் நீரை ஊற்றி வைத்துவிட்டு இரண்டு மணி நேரத்திற்கு பிறகு வடிகட்டி வேளைக்கு 2 அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர பலகீனங்களும் காய்ச்சலுக்கு பின் உண்டாகும் பலகீனங்களும் சரியாகிவிடும்.
அரிசி
அரிசி தவிட்டுடன் பனை வெல்லத்தை கலந்து சிறு உருண்டை செய்து வாயில் போட்டு சாப்பிட்டால் உடல் நல்ல பலன் பெறும்.
கல்யாண பூசணி
கல்யாணபூசணி சாறு 1 டம்ளர் எடுத்து அதில் பனை வெல்லத்தைப் போட்டுக் கலக்கி ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வந்தால் உடம்பில் ஏற்படும் தளர்ச்சி களைப்பு, மூளைச்சோர்வு அத்தனையும் சரியாகிவிடும்.
உடல் மெலிந்து காணப்படுவோர் குண்டாக வேண்டுமானால் வேப்பம்பூவை ஊறவைத்து குடிநீர் தயாரித்து காலையில் பருகி வந்தால் சிறுகச்சிறுக உடல் மெலிவு நீங்கி உடல் குண்டாகத் தொடங்கும்.
நீண்ட நாள் வியாதியில் படுவோருக்கு ஆரஞ்சுபழ ரசமும் ஆரஞ்சுதோல் சேர்த்து நீரும் தக்காளிபழ ரசமும் முன்றும் சமமாக கலந்து குடித்தால் அதீக சீக்கிரத்தில் ரத்தம் அபிவிருத்தி அடைகிறது. நல்ல பலத்தையும் சுறுசுறுப்பையும் பெறலாம்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக