தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 14 மார்ச், 2014

இந்தியாவில் சூரிய சக்தி உதவியுடன் இயங்கக்கூடிய கழிப்பறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


இந்தியாவில் சூரிய சக்தி உதவியுடன் இயங்கக்கூடிய கழிப்பறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

அமெரிக்காவில் செயல்பட்டுவரும் பில் மற்றும் ஆம்ப் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் கழிவறைகளுக்கு ஒரு புதிய வடிவம் கண்டுபிடிக்கும் திட்டத்தின் கீழ் 7,77,000 டொலர் நன்கொடையில் இந்தப் புதிய கழிப்பறை உருவாக்கப்பட்டுள்ளது.

இது நீரின் தேவையின்றி சூரிய சக்தியின் உதவியுடன் மனிதக் கழிவுகளை அதிக வெப்பத்தில் நுண்ணிய கரியாக மாற்றும் தன்மை கொண்டுள்ளது.

அவ்வாறு பெறப்படும் நுண்ணிய கரி பயிர் விளைச்சலை அதிகரிக்கவும், பசுமை வாயு எனப்படும் தனிமைப்படுத்தப்பட்ட கார்பன் டை ஆக்ஸைடைத் தயாரிக்கவும் பயன்படும் என்று குறிப்பிடப்படுகின்றது.

சுற்றுச்சூழல் நட்புறவினை வெளிப்படுத்தும் இந்தத் திட்டம் உலகளவில் பாதுகாப்பான மற்றும் நிலையான சுகாதாரம் கிடைக்கப்பெறாத 2.5 பில்லியன் மக்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று இந்தத் திட்டத்தின் முக்கிய ஆய்வாளரும், கொலொராடோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான கார்ல் லிண்டன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், திட மற்றும் திரவ கழிவுப் பொருட்களை சுத்தப்படுத்தாமல் பயனுள்ள இறுதிப் பொருட்களாக உருவாக்கக்கூடிய இந்த கழிவறைகள் அடுத்த தலைமுறையினருக்கானது என்று கூறியுள்ளார்.

மேலும் தற்போதைய கண்டுபிடிப்பு ஒரு நாளைக்கு நான்கிலிருந்து ஆறு பேருக்கு உபயோகமானதாக இருக்கும். இதேபோல் குறைந்த செலவில் மேம்படுத்தப்பட்ட நிலையில் பல குடும்பங்களுக்குப் பயனளிக்ககூடிய வடிவமைப்புகள் தங்களது தயாரிப்புத் திட்டத்தின் கீழ் இருப்பதாக கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக