தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 15 மார்ச், 2014

கோடை வெயிலுக்கு குளிர்ச்சியான தர்பூசணி!

கொளுத்தி எடுக்கும் வெயிலுக்கு தர்பூசணி பழத்தினை உண்டால் உடம்பெல்லாம் குளுகுளுவென்று இருக்கும்.
கோடைக் காலத்தில் கிடைக்கும் தர்பூசணிப் பழம், உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு, இரும்புச் சத்தும் நிறைந்ததாகும்.
இதில் இருக்கும் இரும்புச் சத்தின் அளவு, பசலைக் கீரைக்கு சமமானதாகும்.
மிகச்சிறந்த vitamin C யும் vitamin A இதில் உண்டு. இதைவிட தேவையான அளவு vitamin B6 ம் vitamin B1 ம், கனியுப்புக்களான potassium and magnesium மும் உண்டு.
பழத்தின், சிவப்பு பகுதியை மட்டும் கத்தியால் செதுக்கி எடுத்து, முள் கரண்டியால் விதைகளை நீக்கி விட்டு, துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடலாம்.
சிறிது உப்பும், மிளகுத்தூளும் அதன் மேல் தூவியும் சாப்பிடலாம்.
மிகவும் எளிமையான, புத்துணர்ச்சியூட்டும் பானமாகவும் தயாரிக்கலாம்.
சிறுநீர் வராமல் சிரமப்படுபவர்கள் இப்பழம் கிடைக்கும் காலங்களில் தினமும் சாப்பிட்டு வந்தால் சிறநீர் வெளியேறும் சிக்கல் தீரும்.
நீர் கடுப்பையும், மூளைக்கு பலத்தையும் தரக்கூடிய பழம். கர்ப்பிணிப் பெண்கள் இப்பழத்தை உண்ணலாம் குழந்தை அழகாக பிறக்கும் என்கிறார்கள். சீதளம் மற்றும் குளிர்ச்சி தேகம் உடைவர்கள் சிறிதளவே உண்ணவேண்டும். இதை அதிகமாக சாப்பிட்டால் பித்தத்தை தரக்கூடியது.
விதை நீக்கப்பட்ட, தர்பூசணித் துண்டுகளை, மிக்ஸியில் போட்டு, ஒன்று அல்லது இரண்டு வினாடி ஓடவிட்டு, குளிர்பதனப் பெட்டியில் வைத்து பரிமாறலாம்.
விருப்பமானால், சிறிது சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு, ஒன்றிரண்டு புதினாத் தழையும் சேர்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக