தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 7 மார்ச், 2014

அனைவரையுமே ஆட்டிப் படைக்கிற கோப உணர்ச்சி !!


இறைவன் அனைத்து இடங்களிலும், நீக்கமற நிறைந்திருப்பவன் என்று சொன்னால், நாத்திகவாதிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நாத்திகர்கள் சொல்வதை, ஆன்மிகவாதிகள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அதேசமயம், ஆன்மிகவாதியோ, நாத்திகவாதியோ யாராக இருந்தாலும், அனைவரையுமே கோப உணர்ச்சி ஆட்டிப் படைக்கிறது என்ற உண்மையை, ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும். கோபத்திற்கு, இன, மொழி, நாடு, வயது, ஆண், பெண், ஊர்வன, பறப்பன, நடப்பன என்று, எந்த பேதமும் இல்லை அரை விநாடியில் கோபப்பட்டு, ஆயுள் முழுவதும் துயரப்படுவோர் நம்மில் அநேகர் உண்டு. கோபத்தின் கொடுமையை விளக்கும் கதை இது: கலியுகம் துவங்கும் நேரம். காமன், கோபன் எனும் இருவர் உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தனர். அப்போது கட்டியங்காரன், காமனின் குணாதிசயங்களை விவரித்துக் கொண்டு வந்தான். காமனுக்கு அடிபணியாத உயிர்கள் இல்லை; அவன், பெரும் பெரும் முனிவர்களைக் கூட, வசப்படுத்தி இருக்கிறான். அப்பேற்பட்ட சக்தி படைத்தவன்... என்று, காமனின் ஆற்றலை கூறினான். அப்போது கட்டியங்காரனின் அருகில் இருந்த கோபன், கட்டியங்காரனின் பேச்சை யாரும் நம்பாதீர்கள். சின்னஞ்சிறு குழந்தைகளிடம், காமனின் ஆட்டம் செல்லாது. நோயாளிகள் மற்றும் முதியவர்கள், ஆகியோரிடமும் காமனின் ஆற்றல் அடிபட்டு போய் விடும். ஆனால், கோபனான என் சக்தி தான் எல்லா இடங்களிலும் செல்லுபடியாகும். ஆண், பெண், படித்தவன், படிக்காதவன், பெரியவன் - சிறியவன், ஏழை - பணக்காரன், நோயாளி- ஆரோக்கியசாலி என, அனைவரையும் ஆட்டிப் படைப்பேன். மா முனிவர்களை கூட ஆட்டிப் படைத்து, அவர்களின் தவ ஆற்றலை தள்ளாட வைத்திருக்கிறேன். எனக்கு கால நேரம், இடம், பொருள் என்பதெல்லாம் கிடையாது. தாய் - தாரம், தகப்பன் - பிள்ளை, குரு - சிஷ்யன் என, எல்லா பேதங்களையும் அடித்து நொறுக்கி, அனைவரையும் குப்பையாக்குபவன் நான். சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாகி எரிந்து போனவன் காமன். ஆகையால், காமனை விட கோபனான நான் தான் பெரியவன்... என்று, சொல்லி முடித்தான். உண்மை தானே... கோபத்தை விட, கொடுமை உண்டா? சற்று அமைதியாக இருக்கும் போது, கோபத்தின் கொடுமையை, அதனால், ஏற்படும் விளைவை யோசித்தால், கோபம் கொள்வது சரியா, தவறா என்பது நமக்கே புரியும்.

 ~ சாம்



அதிகமா கோபப்படாதீங்க! மாரடைப்பு வந்துடும்!

அதிகம் கோபப்படுபவர்களுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் பொது சுகாதார பிரிவின் ஆராய்ச்சிக் குழு நடத்திய ஆய்வில், ஒருவர் தன் நிதானத்தை இழப்பதால் மாரடைப்பு அல்லது பக்கவாதத்தால் பாதிக்கப்படும் ஆபாயம் அதிகரிக்கும்.
மேலும் ஒருவருக்கு பெருங்கோபம் வந்த இரண்டு மணி நேரத்திற்குள் அவருக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு ஐந்து மடங்கு அதிகமாக உள்ளதாகவும், பக்கவாதம் ஏற்ப்படும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகரிப்பதாகவும் கண்டறிந்துள்ளது.
ஆயிரக்கணக்கான நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஒருவர் தன் வாழ்நாளில் எந்த அளவு இந்த மாதிரி அதிகம் கோபப்படுகிறாரோ, அந்த அளவுக்கு அவர் பாதிக்கப்படுவார் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
English Version
Angry outbursts may raise heart attack, stroke risk
Getting really angry might be more dangerous than you think.
A new study found people who experienced severe anger outbursts were more at risk for cardiovascular events in the two hours following the outbursts compared to those who remained calm.
"The relative risk was similar for people who had known pre-existing heart disease and those who didn't," says Dr. Murray A. Mittleman, senior study author and an associate professor of medicine at Harvard Medical School.
The study was designed so that each patient was compared to his or her own baseline risk. "A person with pre-existing heart disease or cardiovascular disease, the absolute risk they are incurring is much greater than (that of) a person without cardiovascular disease or risk factors," Mittleman says.
"If we look at somebody at higher risk for having cardiovascular events, and they get angry multiple times a day, this can lead to 650 extra heart attacks per year out of 10, 000 a year," he says. "When we look at a person who is relatively low risk, but if they do have these episodes of anger fairly frequently, we estimate there would be about 150 extra heart attacks out of 10,000 a year."
Smoking, high cholesterol, high blood pressure, being overweight and having diabetes are all risk factors for cardiovascular disease. An estimated 17 million people worldwide die of cardiovascular diseases, particularly heart attacks and strokes, each year, according to the Centers for Disease Control and Prevention.
The study published Monday in the European Heart Journal was a data analysis looking at nine studies where anger and cardiovascular events were self-reported over nearly two decades. The study found a 4.74 times higher risk of MI (myocardial infarction, or heart attack) or ACS (acute coronary syndrome, where the heart muscle doesn't get enough oxygen-rich blood) following outbursts of anger.
"Anger causes our heart rate to increase through the sympathetic nervous system and causes our stress hormones to become elevated (the fight or flight mechanism)," says Dr. Mariell Jessup, president of the American Heart Association and medical director of the Penn Heart and Vascular Center at the University of Pennsylvania. "We breathe faster, all of which may trigger undesirable reactions in our blood pressure or in our arteries."
This disruption may mean the heart or the brain doesn't get the blood and oxygen they need resulting in a heart attack or a stroke, she says.
Researchers suggest more needs to be done to come up with effective interventions to prevent cardiovascular events triggered by anger outbursts. The American Heart Association suggests regular physical activity, finding a way to relax or talking with friends to help reduce stress and anger.
Mittleman suggests the best way to lower your risk for a heart attack or stroke during an angry outburst is to lower your overall baseline level of risk - exercise, eat healthy and don't smoke - and then find ways to cope with stress and anger.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக