நேற்று சென்னையில் இருந்து என் வீடிற்கு திரும்பி கொண்டிருக்கும் போது ஒரு காட்சியை கண்டேன்....
மிகவும் நெரிசல் நிறைந்த அண்ணா யுனிவெர்சிட்டி - மத்ய கைலாஷ் சாலையில் ஒரு "ஆம்புலன்ஸ்" சிக்கி கொண்டது. உள்ளே மிகவும் மோசமான நிலையில் ஒரு நோயாளி. அவரை சுற்றி அழுது கொண்டிருக்கும் மகள்கள்.... "சைரன்" அடித்தும் வழி விடாத மக்கள்... பார்த்தும் பார்க்காமல் இருக்கும் போக்குவரத்து காவலர்... ஒரு கணம் அதிர்ந்து விட்டேன் இவற்ற்றை கண்டு ....
இதை விட கொடுமையான விஷயம் என்ன என்றால்... என்னோடு காரில் வந்த மற்றும் ஒரு நண்பர், இதெல்லாம் ரொம்ப சாதாரணம்... "அம்புலன்சுக்கு" வழி விட வேண்டும் என்ற சட்டம் எங்கேயாவது இருக்கிறதா என்று கேட்கிறார்.... அவருக்காக இந்த பதில்..
YES! IT IS A LAW.
Section 118 of MOTOR VEHICLES ACT
1988, Rules of the Road Regulations, 1989. Rule10.
Fire service vehicles and ambulance to be given free passage. Every driver shall on the approach of fire service vehicle or of an ambulance allow it free passage by drawing his vehicle to the side of the road.....
சட்டம் என்று எடுத்து கொள்ளாவிட்டாலும்... மனித நேயம் கொண்டு வழிவிடுங்கள்... துடித்து கொண்டிருப்பது ஒரு மனித உயிர் மட்டும் அல்ல, அவரை நம்பி கொண்டிருக்கும் அவரின் உறவுகளின் உயிரும் தான்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக