தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 2 மே, 2017

சனியின் நெருங்கிய படங்களை அனுப்பியது கசினி விண்கலம்

சனி கிரகத்திற்கும் அதன் வளையத்திற்கும் இடையில் முதல் முறைய பயணித்த நாசாவின் கசினி விண்கலம் சனியின் அதிர்ச்சியூட்டும் நெருக்கமான படங்களை பூமிக்கு அனுப்பியுள்ளது.
கடந்த புதன்கிழமை கசினி இந்த அபாயகரமான பயணத்தை மேற்கொள்ளும்போது அதன் தொலைத்தொடர்புகள் முற்றாக இருண்டிருந்தது. இந்நிலையில் நேற்று அந்த விண்கலம் மீண்டும் பூமியுடனான தொடர்பை ஏற்படுத்தியதோடு அது சனிக்கிரகத்தை நெருங்கியபோது எடுத்த படங்களை பூமிக்கு அனுப்பியுள்ளது.
இவ்வாறான சில படங்களை நாசா பொதுமக்களுக்கு வெளியிட்டிருப்பதோடு, அதில் முதலாவது படத்தில் சனி கிரக மேற்பரப்பில் பாரிய சூறாவளி ஒன்று இருப்பது தெரிகிறது.
கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக சனிக்கிரகத்தை வலம்வரும் கசினி விண்கலம், வரும் செப்டெம்பரில் சனியில் விழுந்து தன்னை அழித்துக் கொள்ளவுள்ளது.
அதற்கு முன்னர் விஞ்ஞானிகள் அந்த விண்கலத்தை சனிக்கு மிக நெருக்கமாக பயணிக்கச் செய்து புதிய தரவுகளை பெறும் முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளனர்.
இதன்படி சனிக்கிரகத்திற்கும் அதன் வளையத்திற்கும் இடையில் முதல்முறை பாய்ச்சலை மேற்கொண்ட விண்லம் சனியின் மேற்பரப்பில் இருந்து 1,900 மைல்கள் வரை நெருங்கியது.
சனி கிரகத்திற்கும் அதன் வளையங்களுக்கும் இடையிலான சுமார் 1,500 மைல் இடைவெளியூடே விண்கலம் மணிக்கு 77,000 மைல்கள் வேகத்தில் ஊடருவிச் சென்றது.
கசினி தன்னை அழித்துக்கொள்ளும் முன்னர் சனிக்கிரகத்தை இவ்வாறு மேலும் 21 தடவைகள் நெருங்கி பயணிக்கவுள்ளது. அடுத்து வரும் மே 2 ஆம் திகதி நெருக்கமாக பயணிக்கும்.
நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் இத்தாலி விண்வெளி நிறுவனத்தின் 20 ஆண்டு கூட்டு திட்டமாகவே கசினி விண்கலம் அமைக்கப்பட்டது. 22 அடி உயரம் கொண்ட இந்த விண்கலம் 1997 ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பப்பட்டு 2004 ஆம் ஆண்டு சனி கிரகத்தை வலம்வர ஆரம்பித்தது.
தற்போது எரிபொருள் தீர்ந்து வரும் கசினி செப்டெம்பர் 15 ஆம் திகதி சனியில் விழுந்து தம்மை அழித்துக் கொள்ளவுள்ளது. அது இறந்து விழும் வரை செயல்படவுள்ளது.
http://www.canadamirror.com/canada/86458.html


sane

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக