இவ்வாறு செய்து வந்தால் ஒரு மாதத்தில் முடியின் வளர்ச்சியில் அற்புதமான மாற்றத்தை காணலாம்.
மாம்பழத்தை முடியில் தேய்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- மாம்பழத்தில் உள்ள ஆன்டி-ஆன்ஸ்டன்டுகள் முடி மற்றும் அதன் ஸ்கால்ப்பிற்கு அதிக ஊட்டமளித்து, முடிக்கு சிறந்த பொலிவு மற்றும் வலிமையை கொடுக்கிறது.
- மாம்பழ ஹேர் மாஸ்க்கை வாரம் ஒருமுறை செய்தால், அது கூந்தலை வலுவாக்கி முடி உதிர்வு, இளநரை போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
- மாம்பழக் கூழை மற்ற சில இயற்கை பொருட்களை சேர்த்து கலந்து, அதை ஸ்கால்ப்பில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால், பொடுகு தொல்லைகள் தடுக்கப்படும்.
- மாம்பழத்தில் உள்ள விட்டமின்கள், வெடித்த முடிகளை சரிசெய்ய உதவுகிறது. எனவே மாதத்திற்கு ஒரு முறை மாம்பழத்தை கூந்தலுக்குப் தேய்த்து வந்தால், அது முடியின் வேர்க்கால்களை வலிமையாக்க உதவுகிறது.
- சுருட்டை முடி உள்ளவர்கள், மாம்பழத்தை மசித்து முடிக்கு தேய்த்து வந்தால். முடி நன்கு அடங்கி அதிக சிக்கு ஏற்படாமல் தடுப்பதுடன், சிக்கலினால் ஏற்படும் முடி உதிர்வையும் தடுக்கலாம்.
- மாம்பழக் கூழை தலையில் தேய்த்து வருவதால், முடி உடைவதை தடுக்கலாம். ஏனெனில் அதற்கு மாம்பழத்தில் உள்ள விட்டமின்கள் தான் காரணம்.
http://news.lankasri.com/beauty/03/125486?ref=right_related
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக