இந்த பில்பிமி பழத்தில் விட்டமின் C, B, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் போன்றவை அடங்கியுள்ளது.
பில்பிமி பழத்தின் மருத்துவ நன்மைகள் என்ன?
- சிறிதளவு பெருஞ்சீரகம், சிறிதளவு பில்பிமி மற்றும் சர்க்கரை ஆகியவற்றை வேகவைத்த நீரை, காலையில் வெறும் வயிற்றில் பாதி அளவும், மாலையிலும் குடித்தால், இருமல் பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுபடலாம்.
- 6 பில்பிமி பழங்களை தட்டி ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை தினமும் இரண்டு முறை குடித்தால், நீரிழிவு நோயில் இருந்து விடுபடலாம்.
- பில்பிமி பழங்களில் அமில பொருட்கள் அதிகமாக உள்ளதால், இது முகப்பரு சிகிச்சைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனவே இந்த பழத்தை பாதிக்கப்பட்ட தோல் மீது வைத்து சில நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
- பில்பிமி பழத்தில் உள்ள அமில தன்மை புண்களை குணப்படுத்தும் ஆற்றல் உடையது. எனவே சிறிதளவு நொறுக்கப்பட்ட பில்பிமி பழத்தை பாதிக்கப்பட்ட இடங்களில் வைக்க வேண்டும்.
- வாத நோயினால் ஏற்படும் வலிக்கு, சிறிதளவு பில்பிமி பழத்தின் இழைகளை மிருதுவாக அரைத்து, பாதிக்கப்பட்ட இடங்களில் 2-3 முறை தடவ வேண்டும்.
- பில்பிமி பழத்தை அரைத்து பல்வலி உள்ள இடத்தில் வைத்தால், உடனடியாக குணமாகும். மேலும் இது வாய் புண்களையும் குணப்படுத்தும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக