ஆனால் ஒருவர் பிறந்த தேதியின் படி, எந்த வகையான பொருட்களை வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் எனத் தெரியுமா?
அவ்வாறு பொருட்களை வீட்டில் வைத்திருப்பதன் மூலம், பிறந்த தேதியின் பலனைப் பெற முடியும். அதன் படி ஒருவர் பிறந்த தேதியின் படி எந்த பொருட்களை வைத்திருக்க வேண்டும் எனக் காண்போம்.
முக்கியமாக பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை, அதாவது அது ஒற்றை இலக்க எண்ணாக வரும் வரை கணக்கிட வேண்டும். உதாரணமாக, நீங்கள் பிறந்த தேதி 24 என்றால், அவர்கள் 6 ஆம் எண்ணிற்குரிய பொருட்களை வைக்க வேண்டும்.
பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 1 எனில்
அவர்கள் புல்லாங்குழலை வீட்டின் வடக்கு திசையில் வைத்திருக்க வேண்டும். முக்கியமாக அந்த புல்லாங்குழல் மரத்தால் ஆனதாக இருக்க வேண்டும்.
பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 2 எனில்
வெள்ளை நிறத்திலான ஷோ பீஸை வீட்டின் வட-தென் திசையில் வைத்திருக்க வேண்டும். இதனால் அந்த ஷோ பீஸ் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரித்து, வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் வராமல் தடுக்கும்.
பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 3 எனில்
வீட்டின் வடகிழக்கு திசையில் ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும். அதுவும் முழு ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும். ருத்ராட்ச மாலையைத் தவிர்க்க வேண்டும்.
பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 4 எனில்
அவர்கள் கண்ணாடியை வீட்டில் தென்மேற்கு திசையில் வைத்திருக்க வேண்டும். முக்கியமாக கண்ணாடியை வைத்திருக்கும் போது, அந்த கண்ணாடி முழுமையாகவும், பெரிதாகவும் இருக்க வேண்டும். உடைந்ததாக இருக்கக்கூடாது.
பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 5 எனில்
அவர்கள் வீட்டின் வடக்கு திசையில் குபேரர் அல்லது லட்சுமி படத்தை வைத்திருக்க வேண்டும். இதனால் வீட்டில் செல்வ வளம் பெருகும்.
பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 6 எனில்
வீட்டில் தென்கிழக்கு திசையில் மயில் இறகை வைத்திருக்க வேண்டும். இதனால் வீட்டில் பணப் பெருக்கம் அதிகரிக்கும்.
பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 7 எனில்
அவர்கள் வீட்டின் தென்கிழக்கு திசையில் ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும். அதுவும் அடர் ப்ரௌன் நிற ருத்ராட்சையை வைக்க வேண்டும்.
பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 8 எனில்
அவர்கள் கருப்பு நிற கிரிஸ்டலை வீட்டின் தென் திசையில் வைத்திருக்க வேண்டும். இதனால் அந்த கிரிஸ்டல் அனைத்துவிதமான கெட்ட ஆற்றலையும் ஈர்த்து, நல்ல ஆற்றலை வீட்டில் உலவச் செய்யும்.
பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 9 எனில்
அவர்கள் வீட்டின் தென் திசையில் பிரமீடு வைத்திருப்பது மிகவும் நல்லது.
http://news.lankasri.com/home-garden/03/124446?ref=lankasritop
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக