தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 20 மே, 2017

கோடீஸ்வர யோகம் தரும் மலர்கள்!.. பணம் கொட்டோ கொட்டுனு கொட்டுமாம்

பொதுவாக நறுமணம் மிக்க அனைத்து பூக்களுக்கும் காரகர் சுக்கிர பகவான் தான். அதிலும் நாம் பார்க்க போகும் பூ சுகமளிக்கும் சுக்கிரனின் அனைத்து காரகத்தன்மையும் கொண்டதாக தெரிகிறது. யாரோ எனப்படும் இந்த பூவை வைத்திருந்தாலே காசு கொழிக்கும் என்கிறது ஜோதிடம்.
ஐரோப்பிய நாடுகளை பிறப்பிடமாக கொண்ட அச்சில்லியா என்னும் "யாரோ" பூக்கள் இந்தியாவிலும் பல இடங்களில் காணப்படுகிறது. காஷ்மீர் பகுதியில் அதிகமாக காணப்படும் இந்த யாரோ பூக்கள் கேரளாவில் இடுக்கி பகுதியிலும் தமிழ்நாட்டில் திண்டுக்கல், நீலகிரி பகுதிகளிலும் காணப்படுகிறது.
அச்சில்லியா மில்லிபோலியம் எனப்படும் யாரோ பூக்களுக்கு உள்ள ஜோதிட தொடர்புகள்:
1. குளிர் மிகுந்த பகுதிக்கெல்லாம் நம்ம சுக்கிரபகவான் தான் காரகர் என்கிறது ஜோதிடம். இந்த யாரோ பூக்கள் அதிகமாக வளருவதும் குளிர்பிரதேசங்களில்தான்.
2. யாரோ பூக்கள் வாசனை நிறைந்த தாவரமாகும். இதனை 'ஆரோமாடிக் ஹெர்ப்' அதாவது வாசனை மிகுந்த மருந்துப்பொருள் என்கிறது தாவரவியல். இதிலிருந்து வாசனை மிகுந்த சென்ட் தயாரிக்கப்படுகிறது. வாசனை திரவியங்கள் மற்றும் சென்ட் போன்ற பொருட்களுக்கு சுக்கிரனே காரகர் என்கிறது ஜோதிடம்.
3. யாரோ மலர்களின் காய்ந்த இலை மற்றும் இதழ்களை கொண்டு சுவை மிகுந்த மருத்துவகுணம் கொண்ட தேநீர் தயாரிக்கப்படுகிறது. இந்த தேநீர் சுவை மற்றும் நறுமணம் கொண்டதாக இருப்பதோடு சுறுசுறுப்பை அளிக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது. தேநீர் போன்ற பானங்களின் காரகர் சுக்கிரன் தானுங்கோ!
4. யாரோ பூக்களில் இருந்து தயாரிக்கப்படும் களிம்பு மற்றும் டிஞ்சர் ரத்தத்தை நிறுத்தக்கூடியதகவும் காயங்களை ஆற்றக்கூடியதாகவும் இருக்கிறது. சுகமளிக்கும் சுக்கிரன் எனும் கட்டுரையில் நோய்களை தீர்த்து குணமளிப்பவர் என விரிவாக ஏற்கெனவே சுக்கிரவார பதிவில் கூறியுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.
5. தொண்டை நோய்கள் மற்றும் சுரம், சளி இருமல் போன்ற நோய்களை குறிப்பது காலபுருஷனுக்கு இரண்டாம் வீடான ரிஷபமும் சுக்கிரனும் ஆகும். யாரோ பூக்கள் இருமல், தொண்டை நோய்கள், காய்ச்சல் போன்றவற்றிற்க்கு சிறந்த மருந்தாக பயன்படுவது குறிப்பிடத்தக்கது.
6. சிறுநீரக நோய்களை குறிப்பிடுவது காலப்புருஷனுக்கு ஏழாம் வீடு மற்றும் சுக்கிரனின் வீடான துலா ராசியும் அதன் அதிபதியும் ஆகும். அச்சில்லியா எனப்படும் யாரோ பூக்கள் சிறுநீரக வியாதிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
7. சிறுநீரக செயல்பாடு சீர்குலையும்போது உடலிலுள்ள அசுத்தங்கள் வியர்வை வழியாக வெளியேறுவதால் தோல்நோய்கள் ஏற்படுகிறது. சுக்கிர காரகம் பெற்ற தோல் நோய்களுக்கு சுக்கிர காரகம் பெற்ற யாரோ பூக்கள் மருந்தாகவும் அமைந்தது விந்தையிலும் விந்தையாகும்.
8. ஹோமியோபதி மருந்துகளின் காரகர் சுக்கிரபகவான் ஆகும். இந்த யாரோ பூக்களில் இருந்து காம ஊக்கி மற்றும் ஆண்மை குறைவிற்க்கும் பெண்களுக்கு ஹார்மோன் இம்பேலன்ஸ் எனப்படும் வளர்சிதை மாற்ற கோளாறுக்கும் உயிரனு உற்பத்திக்கும் ஹோமியோபதி மற்றும் மலர் மருந்துகள் தயாரிக்கப்படுகிறது என்பது கூடுதல் தகவலாகும்.
9. யாரோ பூக்களை தலையனையில் வைத்துக்கொண்டு படுத்தால் சுகமான தூக்கம் வரும் என்கிறது மருத்துவ உலகம். சுகமான தூக்கத்திற்கு காரகர் சுக்கிரனேதாங்க.
மொத்தத்தில் சுக்கிரனின் அனைத்து காரகங்களையும் ஒரு சேர பெற்ற பணப்பயிரான யாரோ ஒரு ஹீரோ தானங்க! இந்த மலர் செடியை வீட்டில வைத்திருந்தாலே வீட்டில் மஹாலட்சுமி வாசம் நீங்காமல் நிலைத்திருக்கும் என்பது உண்மை.



- See more at: http://www.manithan.com/news/20170520127176?ref=builderslide#sthash.sDSJryTW.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக