நாக வழிபாடு
இலங்கையிலும் நாகர் இனத்தினர் வாழ்ந்துள்ளார்கள். அவர்கள் வானியல், கட்டடக்கலை, நீர்ப்பாசனத் தொழில் நுட்பம் போன்றவற்றில் சிறந்து விளங்கினார்கள். நாகர் இனம் என்று தனியாகப் பிரித்துப் பார்க்க இலங்கையில் அந்த இனம் இல்லாமல் அங்கு வாழும் அனைத்துத் தமிழ் மக்களிலும் கலந்து விட்டார்கள்.
நாகலிங்கா
நாகரைக் குறிக்கும் ‘நாக’ என்று ஆரம்பிக்கும் பெயர்கள் பரவலாக இலங்கையில், இந்தியாவில் தமிழ் மக்களிடையே இன்றும் நிலவி வருகின்றன. உதாரணத்துக்கு, சில பெயர்களை இங்கு பார்ப்போம். நாகலிங்கம், நாகரத்தினம், நாகம்மா, நாகையா, நாகராயா, நாகமணி, நாகேஸ்வரி, நாகபூசனி, நாகப்பன், நாகநாதன், நாகராணி போன்றவைகளாகும்.
மோசஸ்
நாகர், மாயன் இனங்கள் பாம்புக்கு முக்கியத்துவம் கொடுத்தே வந்துள்ளனர். பாம்பின் அசைவுகள் நடனம் தோன்றுவதற்கும், எழுத்துகளின் வடிவங்கள் தோன்றுவதற்கும் காரணமாக அமைந்திருக்கலாம் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் அபிப்பிராயம்.
பாம்பை செல்வத்தின் குறியீடாகவும், இனவிருத்தியின் அடையாளமாகவும் மாயன்களும், நாகர்களும் கருதியுள்ளனர். பாம்பு குருபாதம்வணக்கத்துக்குரியதாகிவிட்டது. இலங்கையில் தமிழர்கள் தங்கள் இந்துத் திருமணங்களில் மணமகளையும், மணமகனையும் பாம்பின் வடிவமாக தங்களை அலங்காரம் செய்கின்றனர்.
பாம்பை செல்வத்தின் குறியீடாகவும், இனவிருத்தியின் அடையாளமாகவும் மாயன்களும், நாகர்களும் கருதியுள்ளனர். பாம்பு குருபாதம்வணக்கத்துக்குரியதாகிவிட்டது. இலங்கையில் தமிழர்கள் தங்கள் இந்துத் திருமணங்களில் மணமகளையும், மணமகனையும் பாம்பின் வடிவமாக தங்களை அலங்காரம் செய்கின்றனர்.
மணமகள் அணியும் ஜரிகைப் புடவை வடிவமைப்பு, நெற்றிப் பட்டயம், சடைநாகம் அனைத்து அலங்காரங்களும் பாம்பை மையமாக வைத்தே அமைகின்றன.
மணமகனும் ஜரிகைப்பட்டு வேஷ்டி சால்வை அணிந்து, பாம்பின் தலை வடிவத்தில் தலைப்பாகை அணிந்து அலங்காரம் செய்து கொள்கிறார்.
மாயன்களின் வழிபாட்டு இடங்கள் பாம்பின் வடிவமாக அமைந்துள்ளன. இசைக் கருவிகள் மீது பாம்புச் சட்டையை வைக்கிறார்கள். அதனால் இசைக்கருவிகளை மீட்டும்போது நல்ல நாதம் ஒலிக்கும் என்ற நம்பிக்கையே! வயல்களில் பாம்பு காணப்பட்டால், நல்ல விளைச்சல் கிடைக்கும் என்ற நம்பிக்கையும், வீடுகளில், பாம்பு வந்து போனால் செல்வம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு உண்டு. ‘பாம்பை’மாயன்களும் நாகர்களும் தெய்வமாக வழிபட்டார்கள்.
மாயன்
மாயன் மொழி, மாயன் மதம், மாயன் கலாசாரம் அறிவியல் என எல்லாவற்றையும் உடைய முதல் நாகரிக மக்கள் இவர்களாகும் எகிப்துக்கும், கிரேக்கத்துக்கும் கணிதம், வானியல், கட்டடக்கலை ஆகியவற்றைக் கொண்டு சென்றவர்கள் இவர்களே! இலங்கையில், இந்தியாவில், மியான்மரில், ஜப்பானில், ரஷ்யாவில், சீனாவில், கிரேக்க நாட்டில், எகிப்தில் ‘நாக’ என்று ஆரம்பிக்கும் பல நகரங்கள், கிராமங்கள் உண்டு. கிறிஸ்தவத்தின்படி மோசஸின் கையிலுள்ள கோலை அவர் விவாதத்தின்போது கீழே எறிந்திட, அது பாம்பாக மாறி நெளிந்து வளைந்து ஓடியது. அந்தக் கோலின் பெயரும் நாகுஸ்தான் அல்லது நாகுஸ்தா என்பதாகும். அதன் பொருள் பாம்பு என்பதாகும்.
தென் அமெரிக்காவிலுள்ள பூர்வீகவாசிகளான மாயன் இனத்தவர்கள், பெரும்பான்மையாக மெக்ஸிகோ, குவாத்தமாலா, எல்சல்வடோர் ஆகிய நாடுகளில் வாழ்ந்துள்ளனர். இப்படி உலகம் முழுவதும் நாக வழிபாடு பரவிக்கிடப்பது வியப்பிலும் வியப்பான உண்மையாகவே அமைந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக