பெரும்பாலான நாடுகள் பல ஆயிரம் கோடிகளை ராணுவத்திற்கு வாரி இறைத்து, தனது இராணுவ பலத்தை பெருக்கிக் கொள்ள முனைப்பு காட்டி வருகின்றன.
இந்நிலையில், இராணுவ பலத்தில் உலகின் மிக வலிமையான 10 நாடுகளை குளோபல் பயர்பவர் அமைப்பும், கிரெடிட் சூசேவும் இணைந்து வெளியிட்டிருக்கின்றன.
இதில், அணு ஆயுத வல்லமை குறித்த தகவல்களில் முரண்பாடுகள் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததால், ஆய்வில் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
- துருக்கி
துருக்கி உலக அளவில் சக்திவாய்ந்த இராணுவ பலத்தை பெற்றிருக்கும் நாடுகளில் 10-வது இடத்தை பெறுகிறது. ஆண்டுதோறும் இராணுவத்திற்காக 18 பில்லியன் டாலர்களை இராணுவத்திற்காக ஒதுக்கீடு செய்கிறது. துருக்கியிடம் இராணுவ வீரர்களும் 3,778 பீரங்கிகளும், 1,020 போர் விமானங்களும், 13 நீர்மூழ்கி போர்க்கப்பல்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜப்பான்
ஜப்பான் தன்னுடைய இராணுவ பலத்தில் உலக அளவில் 9-வது இடம் பிடிக்கிறது.
ஜப்பானிடம் 4 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள், 2,47,173 இராணுவ வீரர்கள், 678 பீரங்கிகள், 1,613 போர் விமானங்கள் மற்றும் 16 நீர்மூழ்கி போர்க்கப்பல்கள் உள்ளன.
- ஜேர்மனி
உலக நாடுகள் இராணுவ பலத்தில் ஜப்பான் 8-வது இடத்தில் உள்ளது. இராணுவத்திற்கு மிக குறைவாக செலவிடும் நாடாக ஜெர்மனி இருக்கிறது. ஜெர்மனி இராணுவத்திடம் 1,79,046 இராணுவ வீரர்களும், 408 பீரங்கிகளும், 663 போர் விமானங்களும், 4 நீர்மூழ்கி கப்பல்களும் உள்ளன.
மேலும் ஜேர்மனியின் கடற்படை வலிமை குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தென்கொரியா
தென்கொரியா உலக நாடுகள் இராணுவ பலத்தில் 7-வது இடத்தில் உள்ளது. தனது நாட்டிற்கு அருகில் உள்ள வடகொரியாவை சமாளிக்க வேண்டும் என்பதற்காகவே தனது இராணுவ பலத்தை சிறப்பாக வைத்திருக்கிறது.
தென்கொரியாவிடம் 6,24,465 இராணுவ வீரர்களும், 2,381 பீரங்கிகளும், 1,412 போர் விமானங்களும், 13 நீர் மூழ்கி கப்பல்களும் உள்ளன.
- பிரான்ஸ்
இந்தப்பட்டியலில் பிரான்ஸ் 6-வது இடத்தில் உள்ளது. பிரான்ஸிடம் 2,02,761 இராணுவ வீரர்கள், 423 பீரங்கிகள், 1,264 போர் விமானங்கள், 10 நீர்மூழ்கிக் கப்பல்கள், 4 விமானம் தாங்கி போர் கப்பல்கள் உள்ளன.
பிரான்சிடம் இராணுவ வீரர்கள் மற்றும் போர் விமானங்கள் போன்றவற்றில் குறைவாக இருந்தாலும், நவீன தொழில் நுட்பங்களில் பிரான்ஸ் முன்னிலை வகிக்கிறது.
- பிரித்தானியா
பிரித்தானியாவுக்கு இந்த பட்டியலில் 5-வது இடமும் இராணுவத்திற்காக ஆண்டுதோறும் 10 பில்லியன் டொலர்களை செலவு செய்கிறது.
பிரித்தானியாவிடம் 1,46,980 இராணுவ வீரர்கள், 407 பீரங்கிகள், 936 போர் விமானங்கள், 10 நீர் மூழ்கி போர்க்கப்பல்கள் மற்றும் ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல் உள்ளது
- இந்தியா
இந்தியாவிற்கு இந்த பட்டியலில் 4-வது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிடம் 13,25,000 ராணுவ வீரர்கள், 6,464 பீரங்கிகள், 1,905 போர் விமானங்கள், 15 நீர் மூழ்கி போர்க்கப்பல்கள், 2 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளன.
- சீனா
இந்த பட்டியலில் சீனாவுக்கு மூன்றாவது இடம். சீனா இந்த இடத்தை பிடித்தற்கு முக்கிய காரணம் இராணுவ வீரர்களின் எண்ணிக்கை தான் என்று கூறப்படுகிறது.
சீனாவிடம் 23,33,000 இராணுவ வீரர்கள் உள்ளனர். மேலும் 9,150 பீரங்கிகள், 2,860 போர் விமானங்கள், 67 நீர்மூழ்கி போர்க்கப்பல்கள் உள்ளன. ஒரேயொரு விமானம் தாங்கி போர்க்கப்பல் உள்ளது.
- ரஷ்யா
உலகின் மிக வலிமையான இராணுவத்தில் ரஷ்யா இரண்டாம் இடம் பெறுகிறது. ரஷ்யாவிடம் 7,66,055 இராணுவ வீரர்களும், 15,398 பீரங்கிகளும், 3,429 போர் விமானங்களும், 55 நீர்மூழ்கி போர்க்கப்பல்களும், ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலும் உள்ளன. பீரங்கி மற்றும் போ் விமானங்கள் எண்ணிக்கையில் மிக வலிமையானதாக உள்ளது.
- அமெரிக்கா
இந்த பட்டியலில் அமெரிக்காவுக்கு தான் முதல் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 600 பில்லியன் டொலர்களை இராணுவத்திற்காக ஒதுக்குகிறது.
அமெரிக்காவிடம 1,40,000 இராணுவ வீரர்களும், 8,848 பீரங்கிகளும், 13,892 போர் விமானங்களும், 72 நீர் மூழ்கிக் கப்பல்களும் உள்ளன. ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலை பெறுவதே கடினமான நிலையில், அமெரிக்காவிடம் 20 விமானம் தாங்கிப் போர்க்கப்பல்கள் உள்ளன.
http://news.lankasri.com/othercountries/03/124939?ref=lankasritop
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக