காகம் உணர்த்தும் சகுனத்தின் அறிகுறிகள் என்ன?
- காகம் ஒருவரது வாகனம், குடை, காலணி அல்லது உடல் மீது தன் சிறகால் தீண்டினால், அவர்களுக்கு அகால மரணம் நேரிடுமாம்.
- ஒருவரின் எதிரே காகம் வலபக்கம் இருந்து இடபக்கம் சென்றால், அது தன லாபம் கிட்டும். அதுவே இடபக்கம் இருந்து வடபக்கம் சென்றால், அது தன நஷ்டம் உண்டாக்குமாம்.
- ஒருவர் பயணித்து சென்று கொண்டிருக்கும் போது, அவர்களின் திசை நோக்கி காகம் கரைந்து கொண்டே வந்தால், அந்த பயணத்தை தவிர்க்க வேண்டும்.
- ஒருவர் வெளியில் செல்லும் போது, ஒரு காகம் மற்றொரு காகத்திற்கு உணவளிக்கும் காட்சியை பார்த்தால், அது இனிதான செயலை குறிக்கும் சகுனமாம்.
- காகம் தென்கிழக்கு திசை நோக்கி கரைந்தால், அது லாபம். தென்மேற்கு திசை நோக்கி கரைந்தால், அது தயிர், எண்ணெய், உணவு போன்றவற்றில் லாபம் கிடைக்குமாம்.
- காகம் மேற்கு திசை நோக்கி கரைந்தால், அது மது, நெல், முத்து, பவளம் கடல் விளை பொருட்கள் அதிகம் கிடைக்கும். அதுவே வடக்கு திசை நோக்கி கரைந்தால், அது ஆடைகள், வாகனம் ஆகியவற்றில் லாபம் கிடைக்குமாம்.
http://news.lankasri.com/living/03/124902?ref=rightsidebar-tamilwin
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக