இயற்கை, தற்செயல், கடவுள் என அதற்கு நீங்கள் என்ன பெயரிட்டாலும், ஆராய்ச்சியாளர்களே மிரண்டு போய் இன்னமும் வழி கண்டறியாத பல அரிய மர்மங்கள் தமிழகத்தில் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இவற்றையும் தெரிஞ்சி வச்சிக்கோங்க அவ்ளோதான்..
பெரியகோயிலில் வெளிநாட்டு மன்னர் சிலை
உலகின் சிறந்த கட்டிடக்கலைகளுள் ஒன்றாக பல்வேறு அறிஞர்களால் சுட்டிக்காட்டப்பட்ட ஒன்று இந்த தஞ்சாவூர் பெரிய கோயில். சோழர்களால் கட்டப்பட்ட இக்கோயில் கட்டடக்கலையை மட்டுமல்ல சில வேறு விசயங்களையும் உலகுக்கு பறைசாற்றுகிறது.
வெளிநாட்டு பயணி சிலை
ஐரோப்பிய முகத்தோற்றம் கொண்ட ஒருவரின் சிலை தஞ்சாவூர் கோபுரத்தில் செதுக்கப்பட்டுள்ள சிலைகளில் பல்வேறு வகையான கலைகளை பறைசாற்றும் உருவங்கள் உள்ளன. நன்றாக உற்றுநோக்கினால், அதில் ஐரோப்பிய உருவத் தோற்றமுடைய ஒருவரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. கிமு 1010ம் ஆண்டுகளிலேயே கட்டப்பட்ட இந்த கோயிலில் ஐரோப்பிய சிலை இருப்பதில் ஆச்சர்யம் என்ன என்று கேள்வி எழலாம்.
சீன முகத்தோற்றம் கொண்ட ஒருவரின் சிலை
அதே போல சீனப் பயணி ஒருவரின் சிலையும் அங்கு செதுக்கப்பட்டுள்ளது. சீன முகத்தோற்றம் கொண்டவர் யாரென்று கணிக்கமுடியாத போதிலும், ஐரோப்பியர் யார் என்று கணித்துள்ளனர் வரலாற்று ஆய்வாளர்கள். அவர் பிரான்ஸ் மன்னர் இரண்டாம் ராபர்ட் .
அவரது காலமும் கிமு 10 ம் நூற்றாண்டுகள்தான் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதில் என்ன ஆச்சர்யம் என்றால், 1500ம் ஆண்டில் தான் வாஸ்கோடாகாமா என்பவர் உலகை சுற்றிவந்தார். அதுதான் உலகை ஒன்றிணைக்க முயற்சித்த முதல் நடவடிக்கை என்றனர் மேற்கத்திய ஆய்வாளர்கள்.
தமிழனின் உலகத்தொடர்பு
இதிலிருந்து தமிழன் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னரே உலகத்தோடு தொடர்பு கொண்டு வாணிபம் செய்துவந்தது தெரியவந்தது. அவர்களுக்கு மரியாதை செலுத்தவே பிரான்ஸ், சீன மன்னர்களின் சிலைகளை வடிவமைத்து உலகின் சிறப்புவாய்ந்த கோயிலில் வைத்துள்ளான் சோழப்பெருமகன். வழக்கம்போல தமிழர் என்பதால் உலகின் கண்களுக்கு மறைக்கப்படுகிறது என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.
கிருஷ்ணனின் வெண்ணைப் பந்து
இரண்டாவதாக நாம் பார்க்க இருப்பது உலகின் பல்வேறு நாட்டு ஆய்வாளர்கள் வந்தும் இன்னமும் விடைகிடைக்காத ஒரு நிகழ்வு. கிருஷ்ணனின் வெண்ணைப்பந்து. மகாபலிபுரத்தில் அமைந்துள்ள இந்த பந்து போன்ற பாறை மிகவும் அசாதாரண முறையில் மலைக்கு மேல் உள்ளது.
இந்த பாறை சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் யார் உருவாக்கியது அல்லது இயற்கையாகவே வந்ததா என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது. இதன் எடையை ஒப்பிடும்போது இது மலையிலிருந்து உருண்டு விழவேண்டும் ஆனால் தகுந்த பிடிப்பு ஏதும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அப்படியே அமர்ந்துள்ளது.
அகற்ற முயன்றபோது என்ன ஆனது?
100 ஆண்டுகளுக்கு முன் மெட்ராஸ் கவர்னர், இதை அகற்ற முயற்சித்தார். இதனால் மலையடிவாரத்தில் வசிக்கும் மக்களுக்கு ஆபத்து நேரிடலாம் என்று, 17 யானைகளைக் கொண்டு நகர்த்த முயற்சித்தார். ஆனால் துளியளவும் நகர்த்தமுடியவில்லை. இது இன்றுவரையில் மர்மமாகவே உள்ளது. எனினும் இது சுற்றுலாவுக்கு சாதகமான இடமாக மாறிவிட்டது.
கோபத்தில் வியர்க்கும் சிலை
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் முருகப்பெருமான் சிங்காரவேலவராக காட்சியளிக்கிறார். இந்த கோயிலில் அக்டோபர் மாதம் 6 நாள் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இதில் 5 வது நாள் அசுரனை அழிக்கும் நிகழ்வு நடக்கும். இந்த நிகழ்வின் போது சிங்காரவேலர் தன் தாயிடம் தனது ஆயுதமான வேலைக் கொடுப்பதாக நம்பிக்கை நிலவுகிறது. இதில் என்ன ஆச்சர்யம் வழக்கமான நிகழ்வுதானே என்கிறீர்களா
சூரபத்மனை அழிக்க வேலை தன் தாயிடம் கொடுக்கும்போது, முருகன் சிலை அசாதாரணமாக காணப்படுமாம். முகத்தில் சில மாற்றங்களும் தென்படுமாம். அதிலிருந்து வரும் வியர்வைத்துளிகள் உடல் வழியாக வழிந்து அபிஷேகம் செய்ததுபோல காட்சிதருகிறது என்கின்றனர் பக்தர்கள். இந்த வியர்வைத் துளிகள்தான் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது நோய், நொடிகளைத் தீர்க்கும் குணம் வாய்ந்ததாக நம்பப்படுகிறது.
நாச்சியார் கோயில் கும்பகோணம்
கும்பகோணம் அருகே நாச்சியார் கோயிலில் ஒரு அதிசயம் நிகழ்வதாக கூறப்படுகிறது. அதாவது கல் கருடன் சுவாமியின் சிலை எடை அதிகரித்து குறைவதாக நம்பிக்கை நிலவுகிறது. நாச்சியார் கோயிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி- பங்குனி மாதங்களில் திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவின் போது கல் கருடன் சிலை கோயிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுமாம்.
சிலையின் எடை அதிகரிப்பு
கருவறையிலிருந்து சிலையை வெளியில் கொண்டு செல்ல செல்ல சிலையின் எடை அதிகரிக்குமாம். மறுபடியும் உள்ளே வர வர எடை குறையுமாம். முதலில் 4 பேர் சேர்ந்து சிலையை தூக்கிவிடமுடியுமாம். பின்னர் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கவும் சிலையின் எடை அதிகரிக்க, மேலும் இரண்டு இரண்டு பேர் சேர்ந்துகொண்டே சிலையை தூக்குவார்களாம்.
ராமர் பாலம்
ராமாயண கதைப் படி இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்ல ராமன் கடல்வழியே மிதக்கும் பாறையை பயன்படுத்தினான் என்பது நம்பிக்கை. இந்த பாலம் தற்போதும் உள்ளது என்று கூறி சேது சமுத்திர திட்டத்துக்கும் பலர் எதிர்ப்பு கிளப்பி வருவது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் இந்த மிதக்கும் பாறைகள்? ராமேஸ்வரத்தில் கண்டெடுக்கப்பட்ட இப்பாறைகள் மிதக்கின்றன.
நீரில் மிதக்கும் பாறைகளை சுற்றுலாப்பயணிகள் அதிசயித்து பார்த்துச் செல்கின்றனர். இதை சில ஆய்வாளர்கள், சுண்ணாம்பு பாறை,பவளத்தினால் ஆன பாறையாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். எனினும் இன்றுவரை இந்த பாறையின் மிதக்கும் மர்மம் தெளிவாகவில்லை
- See more at: http://www.manithan.com/news/20170512127008?ref=builderslide#sthash.XIGfHmf1.dpuf
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக