தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 15 மே, 2017

கனடா வாழ் வைதிகா (Vaithiga) கருணாநிதி (இலங்கை தமிழ்ப் பெண்) தனது அகதி வாழ்க்கை தொடர்பில் சில கருத்து....

புகலிடக் கோரிக்கையாளர்களாகச் சென்ற இலங்கைத் தமிழர்களின், அவர்களது அகதி வாழ்க்கை தொடர்பில் உலகளாவிய ரீதியில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், கனடா வாழ் வைதிகா (Vaithiga) கருணாநிதி என்ற இலங்கை தமிழ்ப் பெண் ஒருவர் தனது அகதி வாழ்க்கை தொடர்பில் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
சமூக பணி தொடர்பிலான கற்கை நெறிகளை படித்த வைதிகா (Vaithiga) , தற்போது ஒரு மனநல சுகாதார ஊழியராக பணியாற்றி வருகின்றார்.
தனது தந்தை புகலிடக் கோரிக்கையாளராக நாட்டை விட்டு செல்லும் போது அவர் எதிர்நோக்கிய இன்னல்கள் குறித்து வைதிகா (Vaithiga) கருத்து தெரிவித்துள்ளார்.
“36 ஆண்டுகளுக்கு முன்னர், என் அப்பா இலங்கையை விட்டு வெளியேறினார், எனது அப்பாவின் குழந்தை பருவம் இலங்கையிலேயே ஆரம்பிக்கப்பட்டது. அவர் மகிழ்ச்சியையும் வலிகளையும் இலங்கையிலேயே அனுபவித்து வந்தார்.
எனது தந்தையின் இளம் வயதிலேயே அவரது தாயார் இறந்துவிட்டார். அவர் தனது குடும்பத்தை காப்பாற்ற பல முயற்சிகளை மேற்கொண்டார்.
எனவே கையில் குறைந்த பணத்துடன் ஏதாவது வேலையை தேடி இலங்கையை விட்டு வெளிநாடு சென்றார்.
இவ்வாறு வெளிநாட்டிற்குச் சென்ற எனது தந்தை, சுரங்கப்பாதை நிலையங்களிலும் மற்றும் சீரற்ற புகையிரத நிலையங்களிலும் பல இரவுகளை கழித்துள்ளார்.
இந்த நிலையில் அவர் தெரியாத நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
வெளிநாடுகளில் பேசப்படும் மொழி தொடர்பில எந்த அறிவும் இன்றி என தந்தை பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வந்தார். மேலதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக குளிர்காலத்தில் கூட பெஞ்சுகளில் நித்திரை செய்துள்ளார்.
புலம்பெயர்ந்தோர் தங்கள் வேலையை திருட்டுத்தனமாகவே செய்து வருகின்றனர் என சிலர் கூறுகின்றனர். ஏன் அப்படி கூறுகின்றார்கள்?
என் அப்பாவைப் போல பெரும்பாலான புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்த சூழ்நிலைகளுக்குள் தள்ளப்படுகின்றார்கள், ஏனெனில் அவர்கள் தங்கள் சொந்த மண்ணை விட்டு வெளியேறி புதிதாக ஏதாவது முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
என் அப்பா அழுது கஸ்டப்பட்ட அந்த தருணங்களை, எண்ணற்ற எண்ணங்களை என்னால் கணக்கிட முடியும். இந்த நிலையில் அவர் மீண்டும் இலங்கை சென்ற போது நிலைமை மாறியது.
என் அப்பா தனது சிறுவயது வீட்டிற்கு திரும்பி சென்று பார்த்த போது அவர் உடைந்து போனார். அதற்குப் பிறகு அவர் என்னை அழைத்து, அவரது குழந்தை பருவத்தின் நினைவுகள் மற்றும் அவர் இழந்த எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்தேன் என என்னிடம் தெரிவித்தார்.
என் 22 வருட வாழ்க்கையில், முதல் தடவையாக, நான் என் பெற்றோரின் தியாகம் பற்றி உணர்ந்தேன், நான் பெற்றுக் கொண்ட இந்த அனுபவங்களை அடிக்கடி கவனத்திற் கொள்வேன்.
அவர்கள் குழந்தைகளுக்காக ஆரம்பித்த வாழ்க்கை ஆடம்பரமாக எப்போதும் தொடங்கியதில்லை. ஆகவே, குடியேறியவர்களுக்கும் அகதிகளுக்கும் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு இருமுறை நாம் யோசிக்க வேண்டும்.
கணக்கிலடங்கா புலம்பெயர்ந்தோரின் கடின உழைப்பால் அவர்களுக்கு கனடாவில் புகலிடம் வழங்கப்பட்டது. இங்கு வசிப்பதற்கு நாம் எப்பொழுதும் பெருமைப்படுவோம்” என கனடா வாழ் இலங்கை தமிழ்ப் பெண் வைதிகா (Vaithiga) கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக