தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, May 1, 2017

பெண்களின் வலிகள்!!!

பெண்களின் வலிகள்!!! இதை படிக்கும் போது அந்த வலியினை நீங்களும் உணர்வீர்கள்...........
1-5 வரை
.
.
பெண் பிறந்து விட்டதே என்ற பெற்றோரின் வலி
.
அதனை சமாளித்து வாழும் குழந்தையின் வலி
.
5-10 வரை
.
அண்ணனின் கண்டிப்பில் தன் கோபத்தை அடக்கி கொண்டு அதை வெளிபடுத்த முடியாமல் முடியாமல் தவிக்கும் வலி
.
அண்ணனுக்கு முளு சுதந்நதிரம் எனக்கு அரை சுதந்திரம் கேட்டால் நீ ஒரு பெண் என்று கூறுவார்கள் அதில் ஏற்படும் வலி
.
10-15 வரை
.
பள்ளி மாணவர்களிடம் பேசும் போது மற்றவர்கள் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கும் போது ஏற்படுகின்ற வலி
.
மாணவர்களின் தவறான பேச்சு அணுகுமுறையை எதிர்க்கும் போது ஏற்படுகிற வலிகள்
.
15-20 வரை
.
தொடக்க மாதவிடாய்யின் போது ஏற்படுகின்ற வலி
.
அது மட்டும் அல்லாமல் பலருக்கு அந்த வலியை மாதம் தோறும் அனுபவிக்க வேண்டி இருக்கும் அதை வெளியில் காட்டி கொள்ளாமல் தனக்குள் அடக்கி கொள்ளும் போது ஏற்படுகின்ற வலி
.
நீ இப்போ பெரிய பொண்ணு ஆகிட்ட அது நால அத பண்ண கூடாது இத பண்ண கூடாது என்று சொல்லும் போது ஏற்படுகின்ற வலி
.
ஒரு ஆண்மகனை பொதுவாக பார்த்து சிரித்தால் கூட அதனை தவறாக புரிந்து கொண்டு திரும்ப திரும்ப தொல்லை செய்யும் போது ஏற்படுகின்ற வலி
.
21-25 வரை
.
காதலில் விழுந்து ஏமாந்து அல்லது ஏமாற்றி விட்டு இப்படி நடந்து விட்டதே என்று நினைக்கும் போது ஏற்படுகின்ற வலி
.
சமூகம் ஏற்படுத்துகின்ற பாலியல் தொல்லைகள் ஏற்படுத்துகின்ற வலி
.
நாம் சரியாக இருந்தாலும் சமூகம் அதனை தவறாக புரிந்து கொண்டு ஏற்படுத்துகின்ற வலிகள்
.
25-30 வரை
.
திருமணம் நடந்தால் அவர் சரியானவர் தானா எனகிற கவலை
.
திருமணம் ஆகவில்லை என்றால் அதுவும் கவலை
.
குழந்தை பிறக்கும் போது ஏற்படுகின்ற வலி
.
குழந்தையின் நோயின் போது தாய்க்கு ஏற்படும் வலி
.
இவ்வளவு வலிகளை நான் தாங்கிய பின்பும் என் கணவர் என்னை புரிந்து கொள்ள வில்லையே என்கிற பெரும் வலி
.
எனது அருமை சகோதரர்களே பெண்களின் வலிகளை புரிந்து கொள்ளுங்கள்
.
உங்களிடம் சொல்ல முடியாத வலிகள் அவர்களுக்குள் அதிகம் உண்டு அதனை புரிந்து கொண்டு விலகி செல்லுங்கள்
.
அவர்களை சுதந்திரமாக அவர்களை யோசிக்க விடுங்கள்
.
உங்கள் கருத்துக்களை அவர்கள் மேல் திணிக்காதிர்கள்......

No comments:

Post a Comment