தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 1 மே, 2017

இது சாத்தியமா? நம்ப முடியாத குழப்பமான உண்மை!

நாளைக்கு என்கின்றோம், நேற்று நடந்தது என்கின்றோம், இப்போது என்கிறோம். ஆனால் நிச்சயமாக இவை இருக்கின்றதா? அதாவது மூன்று காலங்களும் உண்மையா?
அவற்றில் தான் நாம் வாழ்கின்றோமா?? இந்தக் கேள்விக்கு காலங்கள் இருப்பது உண்மை ஆனாலும் நாம் வாழ்வது, பார்ப்பது இறந்த காலத்தை மட்டுமே நிகழ்காலத்தை அல்ல என்பதே உண்மை.
நமது கண்களால் இறந்தகாலத்தை மட்டும் தான் பார்க்கின்றோம். ஆனாலும் நாம் நிகழ்காலத்தில் தான் வாழ்கின்றோம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.
சுத்தமாக குழப்பமா? அறிவியல் கூறுகின்ற பல விடயங்கள் குழப்பமாகவே இருக்கும். இதனை தெளிவாகப் பார்க்கலாம்..,
நிகழ்காலத்தில் வாழும் நாம் எமது கண்களால் நிகழ்காலத்தை பார்க்கவில்லை. எதிர்காலத்தையே பார்ப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது ஒளியானது ஒரு பொருளில் பட்டுத் தெறித்து மறுபடியும் கண்களை அடையும் போதே அந்தப் பொருள் கண்களுக்கு தெரியும்.
இங்கு கவனிக்கவேண்டிய விடயம் என்னவெனில் ஒளியானது ஒரு பொருளில் பட்டுத் தெறித்து மீண்டும் எமது கண்களை வந்து அடைவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் எடுக்கும்.
அவ்வாறான ஒளி ஒரு நொடியில் சுமார் 300000 கி.மீ தூரத்தினை கடக்கின்றது. அதாவது ஒளி ஒரு நொடியில் பூமியிலிருந்து நிலவிற்கு சென்றுவிடும்.
அதேபோல் ஒளி ஒரு நொடியில் நமது புவியை 7 தடவைகளுக்கு மேல் சுற்றிவிடும். அதனால் அந்த வேகத்தை உணருவது கடினமான விடயம்.
இப்போதைய கண்டுபிடிப்பு வரை அதிவேகம் என்பது ஒளியின் வேகம் மட்டுமே. இந்த பிரபஞ்சத்தின் அதி கூடிய வேக எல்லையும் இந்த ஒளியே ஆகும். (இப்போதைய கண்டு பிடிப்பின் படி)
அதே சமயம் கற்பனை கூட பண்ண முடியாத இந்த ஒளியின் வேகம், பூமியில் இருக்கும் வரை மட்டுமே பிரமாண்டமாக இருக்கிறது. அதே ஒளி விண்வெளியில் பயணிக்கும் போது சிறிதாகிவிடும்.
உதாரணத்திற்கு சூரியன் புவியில் இருந்து 149,600,000 கி.மீ தூரத்தில் இருக்கின்றது. அதன்படி சூரியனில் இருந்து புறப்பட்டு வரும் ஒளி பூமியை வந்து சேர சுமார் 8 நிமிடங்கள் எடுத்துக் கொள்கின்றது.
இங்கு தெளிபடுத்திக் கொள்ள வேண்டியது அன்றாடம் நாம் பார்த்துக் கொண்டிருப்பதும் இறந்த கால சூரியனையே. அதாவது பழைய சூரியனையே.
சூரியன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அழிந்துவிட்டால், வெடித்துச் சிதறினால் அதனை 8 நிமிடங்களுக்குப் பின்பு தான் பூமியில் உள்ளவர்களுக்கு தெரியும்.
சூரியன் அழிவதை எம்மால் பார்க்க முடிவது, சூரியன் அழிந்து 8 நிமிடங்களின் பின்னரே அதாவது இறந்த காலத்திலேயே. அது போலவே ஏனைய அனைத்தும்.
ஒளியின் வேகம் காரணத்தால் ஒளி ஒரு பொருளில் பட்டுத் தெறித்து நமது கண்களை அடைவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் எடுத்துக் கொள்ளும்.
அதன் படி பார்க்கும் போது, எப்போதும் எமது கண்கள் பார்ப்பது இறந்த காலத்தை மட்டுமே எனக் கூறுகின்றார்கள் ஆய்வாளர்கள்.
1 மீட்டர் தூரத்தில் உள்ள ஒருவரை நாம் பார்க்க வேண்டும் என்றால், ஒளியானது அவரில் பட்டுத்தெறித்து நமது கண்களை வந்தடைய வேண்டும்.
இங்கு ஒளியானது அவர் மீது பட்டு தெறித்து சரியாக 1 மீட்டர் தூரம் பயணம் செய்து விட்டு மீண்டும் நமது கண்களை அடைந்தால் மட்டும் தான் நமக்கு அவரைத் தெரியும்.
அப்படியென்றால் ஒளி ஒரு நொடியில் 300,000 கி.மீ தூரம் பயணம் செய்கின்றது. 1 மீட்டர் தூரம் ஒளி செல்வதற்கு செல்வதற்கு கிட்டத்தட்ட 0.000000003 நொடி எடுக்கும்.
இது உணரக்கூடிய நேரமாக இல்லையே என்று கூறலாம் ஆனாலும் அதுவும் நேரமே. அந்த வகையில் பார்க்கும் போது இறந்த காலத்தையே நாம் பார்த்துக் கொண்டு இருக்கின்றோம் என்பது உண்மையாகின்றது.
இதனை விண்வெளியில் இருக்கும் போது அல்லது ஒளியின் வேகத்தை தாண்டி நாம் பயணம் செய்யும் போதும் நன்றாக அறிந்து கொள்ளலாம்.
அதே போல் இந்த ஒளியானது முடுக்கம் (விசை) எதுவும் இன்றி அதி வேகத்தில் பயணிக்கும், ஆரம்பத்தில் அடைந்த வேகத்தை குறைத்துக் கொள்ளாது செல்லும் ஒளியானது.,
தான் பயணம் செய்ய ஆரம்பித்த இடத்தில் இருந்து பட்டு தெறிப்படையும் வரை வேகத்தில் மாற்றம் எதுவும் இருக்காது. இது விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை அளிக்கின்றது.
அதேபோல் நியூட்ரினோ எனப்படும் அணுவின் அடிப்படைத்துகள்களில் ஒன்றானது, ஒளியை விட வேகமாக பயணிப்பதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதனை நிரூபிக்கும் ஆய்வுகள் 2011 ஆம் தொடக்கம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன் படி இது நிரூபிக்கப்பட்டால் அடுத்த பரிமாணம் பற்றிய தெளிவுகள் பிறக்கும் எனவும் நம்பப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக