விருக்ஷ என்றால் மரம் என்று பொருள். மரம் போல் நிற்கும் நிலையே விருக்ஷாசனம்.
ஆசனத்தின் படிநிலைகள்...
1) ஒற்றைக் காலில் நின்றபடி கைகள் இரண்டையும் மேலே தூக்கிக் காதுகளை ஒட்டி கூப்பிக்கொள்ள வேண்டும்.
2) நிற்கும் கால் நிலையாக, நேராக இருக்க வேண்டும்.
3) நிற்கும் காலின் தொடை மீது மடித்துவைக்கப்பட்ட கால் பாதம் கீழ்நோக்கி இருக்க வேண்டும்.
4) மடித்துவைக்கப்பட்ட கால் பாதம், நிற்கும் காலின் மீது முழுமையாகப் படிந்திருக்க வேண்டும்.
5) மடித்துவைக்கப்பட்ட கால் 90 டிகிரி அளவில் பக்கவாட்டில் விரிந்திருக்க வேண்டும்.
6) மடித்துவைக்கப்பட்ட காலின் தொடைக்கும் குதிகாலுக்கும் இடையில் இடைவெளி இல்லாத நிலையே ஆகச் சிறந்த நிலை.
ஆசனம் தரும் பலன்கள்:
1) கால்களின் வலிமையையும் தாங்கும் திறனையும் கூட்டுகிறது.
2) பாதங்களின் இணைப்புகள், ஜவ்வுகளுக்கும் திசுக்களுக்கும் வலிமை ஊட்டுகிறது.
3) இந்த ஆசனத்தைத் தொடர்ந்து செய்துவந்தால் பாதம் முதல் முதுகெலும்பு வரையில் முழு காலுக்கும் வலிமை கூடும்.
4) காலின் வடிவத்தில் அழகு கூடும்.
5) இடுப்புப் பகுதியின் உறுதித்தன்மையைக் கூட்ட உதவும்.
6) இடுப்பெலும்புகளின் வலிமை கூடும்.
7) விருக்ஷாசனம் உடலின் சமநிலையைக் கூட்டி, தடுமாற்றத்தைப் போக்குகிறது.
8) கவனக் குவிப்புத் திறன் வளரும். மாணவர்களுக்கு இது மிகவும் நல்லது.
9) தொடர்ந்து செய்துவந்தால் மனதின் தடுமாற்றங்களும் பதற்றங்களும் குறைந்து மனச் சமநிலை கிடைக்கும். படிப்படியாக நம் வாழ்விலும் சமநிலை கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். See More

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக