தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

SAGI பேன்ட் (sagging fashion) கலாச்சாரம் எப்படி வந்தது தெரியுமா?


இதன் பூர்வீகம் அமெரிக்கா. அங்குள்ள சிறைகளில் பெல்ட் அணிவதற்கு தடை இருந்தது. சரியான அளவில் பேன்ட் இல்லாததால், சில கைதிகளுக்கு இடுப்பிலிருந்து பேன்ட் தொங்கியது.
பிறகு, இதுவே அமெரிக்க சிறைகளில் ஒருவித உடை கலாச்சாரமாக மாறியது. ஓரினச் சேர்க்கையை விரும்பும் கைதிகள், பிற கைதிகளுக்கு ‘சமிக்ஞை’ காட்டுவதற்காக பேன்ட்டை இடுப்புக்கு கீழே இறக்கி, உள்ளாடை தெரியும்படி அணியும் முறையைப் பின்பற்றினார்கள்.
சிறையிலிருந்து வெளிவந்த பிறகும், அதே பாணியில் அவர்கள் பேன்ட் அணிய, பின்னாளில் இது ஒரு ஃபேஷன் ஆகி விட்டது. இதனை, மாசசூசெட்ஸ் அம்ஹெர்ஸ்ட் பல்கலைக் கழகத்தின் வரலாற்று ஆசிரியர் தனிஷா உறுதியான தகவல் அல்ல என்று மறுத்தாலும், 1990-களில் இந்த லோ-ஹிப் பேன்ட்டை ஹிப் ஹாப் கலைஞர்கள் பிரபலப்படுத்தினர்.
இளைஞர்களும் தங்களை நிராகரிக்கும் பிரதான சமூகத்தினருக்கு மத்தியில் சுதந்திரம் மற்றும் கலாச்சார விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு அடையாளமாக ஸேகி பேன்ட் அணிய ஆரம்பித்தார்கள். இவர்கள் ஸேகர் (sagger) என்று அழைக்கப்படுகின்றனர். அறிந்தோ, அறியாமலோ உள்ளாடைக்கு இலவச விளம்பரம் செய்யும் ஒரு உத்தியாகவும் இது பேசப்படுகிறது.
பல்வேறு நாட்டினரும் வசிக்கின்ற வட அமெரிக்காவில் உள்ள மெக்சிகனில் உள்ளாடை தெரியும் வண்ணம் பேன்ட் அணியக் கூடாது என்பதைச் சட்டம் ஆக்கியிருக்கிறார்கள். பொது இடங்களில், இது போன்ற உடை அணிந்து, மக்களின் உரிமையில் தலையிடுவது தவறு என்று கருதியது அமெரிக்காவில் உள்ள லூசியானா.
அதன் மக்களும், நகராட்சி நிர்வாகமும் நாகரீகம் என்ற பெயரில் இளைஞர்கள் நடத்தும் இந்தக் கண்றாவி கூத்தை எதிர்த்தன. இதற்கென்றே உத்தரவு பிறப்பித்தது லூசியானா. அதன்படி, இடுப்புக்கு கீழே முக்கால் பேன்ட் அணிபவர்களுக்கு முதலில் 30 பவுண்டும், 2-வது தடவை 70 பவுண்டும், அதையும் மீறி மூன்றாவது தடவையும் இதே தவறை தொடர்ந்து செய்து பிடிபட்டால், 16 மணி நேரம் பொதுச் சேவை செய்ய வேண்டும் என்பதை தண்டனையாக அறிவித்தது.
பொது மக்களின் நன்மைக்காகவே இப்படி ஒரு உத்தரவு போடப்பட்டிருக்கிறது என்கிறார்கள் அந்நாட்டின் அதிகாரிகள். ஒரு கட்டத்தில் ‘இடுப்பிலிருந்து பேன்ட்டை உயர்த்தி, உங்கள் இமேஜை உயர்த்திக் கொள்ளுங்கள்’ என்று விளம்பரம் செய்ய வேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டது. அமெரிக்க அதிபர் ஒபாமாவும் கூட, நாகரீகம் என்ற பெயரில் இது போன்ற உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும் என்று நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்தியாவில், முதன் முதலில் ஹிந்தி நடிகர்கள்தான் இதனை ஒரு ஃபேஷனாக கொண்டு வந்தார்கள். இதுதான் இளைஞர்கள் மத்தியில் பரவியிருக்கிறது. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377-ன் படி, ஓரினச் சேர்க்கை குற்றமாகும். இதற்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
இது போன்ற விஷயங்களை அறிந்திடாமல், ஃபேஷன் என்று சொல்லிக் கொண்டு லோ-ஹிப் பேன்ட் உடுத்துகின்றார்கள் இளைஞர்கள். பல நூற்றாண்டு பாரம்பரிய கலாச்சாரம் உள்ள இந்தியாவில், இத்தகைய உடைகளை அணிவது வெட்கக் கேடான செயல்தான்! வேறென்ன சொல்வது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக