தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

முருகா என்றால்:


எந்த அளவிற்கு பிற உயிர்களுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணுகின்றானோ அந்த அளவிற்கு அவனது நிலை உயரும் என்பதை முருகன் அருளால் அறியலாம். பல உயிர்கள் வாழ்க வாழ்க என மனதார வாழ்த்தும் போது அந்த உயிர்களின் எண்ண அலைகள் உயிர்களை மகிழ்வித்தவனுக்கு சென்று மகிழ்வித்தவன் ஆன்மாவை மேன்மேலும் ஆக்கம் பெற செய்கிறது. எல்லா உயிர்களும் பஞ்சபூதங்களால் ஆனதே, இயற்கையே பஞ்சபூதமாகும். ஆதலினால் பஞ்சபூதத்தினால் ஆனஉயிர்களை மகிழ்விக்க மகிழ்விக்க பஞ்சபூதமே மனம் மகிழ்ந்து ஆசி கூறுவதால் பஞ்சபூதத்தால் ஆன இயற்கையும் நம்மை ஆசீர்வதித்து அருள் செய்கிறது. அந்த இயற்கை அருள்கூடி அந்த இயற்கையே நமக்கு கட்டுப்படுகிறது. பஞ்சபூதத்தை இவ்விதமே கட்டுப்படுத்திட உலக உயிர்கள்பால் அளவிலாது அளவிலாது கரையற்ற கருணை கொண்டு அன்புசெலுத்தி உலக உயிர்களிடத்து ஆசிகளை பெற்று இயற்கையை வசப்படுத்தி பஞ்சபூதங்களையும் தம்முள் அடக்கி, ஒடுங்கச் செய்து இயற்கையை வென்று வெற்றி கண்டவன் அருள்மிகு முருகப்பெருமான்.

அன்பே வடிவான அருள்ஜோதி ஆண்டவன் முருகப்பெருமான் திருவடிகளை உளம் உருகி பற்றி பூசிக்க பூசிக்க இயற்கையை வெல்லும் உபாயமும், உலக உயிர்களிடத்து ஆசிபெறும் உபாயமும், ஜீவதயவும், பஞ்சபூதத்தை வெல்லும் சக்தியையும் படிப்படியாக முருகனே நம்மை உடனிருந்து நடத்தி சென்று அருளிக் காப்பான்.

ஆதலினால் முருகன் அருளை பெற விரும்பினால் பிற உயிரை கொன்று அதன் உடலை புசிக்கும் கொடிய பழக்கமான அசைவ உணவை அறவே ஒழித்து உயிர்களது ஆசியை பெறும் மார்க்கமான சைவ உணவிற்கு வரவேண்டும் ஜீவதயவு இல்லையேல் முருகன் அருள்பெற முடியாது.

மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக