தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 10 ஆகஸ்ட், 2016

மதுரை மீனாட்சி அம்மன் தரிசனம்!

மதுரை என்றாலே பலருக்கும் சட்டென்று நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் திருக்கோவில் தான்.
மதுரையில் மீனாட்சி பிறந்ததாகக் கருதப்படுவதால், மீனாட்சி சன்னிதானம் முதன்மையாக உள்ளது. அம்மனை வணங்கிய பின்னரே சிவபெருமானை வணங்கும் மரபு இங்கு கடைபிடிக்கப்படுகிறது.
மிகவும் பழம்பெரும் தொன்மையும், நீண்ட நெடிய வரலாறுச்சிறப்பும், உலக புகழ் மிக்கதுமான மதுரை மீனாட்சி கோவில் தொடர்பிலான சிறு தகவல்கள் இவை,
  • மதுரை மீனாட்சியில் அமைந்துள்ள முதன்மை விக்கிரகம் முழுவதுமாக தூய மரகத மாணிக்கத்தினால் உருவாக்கப்பட்டதாகும்.
  • மரகத்தின் இயற்கை வர்ணமான பச்சை நிறத்தில் காட்சி தரும் மூல விக்கிரகத்தினை மரகதவல்லி எனவும் அழைக்கின்றனர்.
  • மதுரை மீனாட்சி கோவில் 45 ஏக்கர் (180,000 சதுர மீற்றர்கள்) நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் மொத்த தள அமைப்பு 254 மீற்றர் நீளமும் 237 மீற்றர் அகலமும் கொண்டுள்ளது.
  • இந்த ஆலயம் 8 கோபுரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. 8 கோபுரங்களும், நான்கு முனை சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள இரட்டை கோபுரத்தில் ஒன்று மீனாட்சிக்கும், மற்றொன்று சுந்தரேஸ்வரர்க்கும் அர்பணிக்கப்பட்டுள்ளது.
  • ஒன்பது தட்டுக்களை (அடுக்கு) கொண்ட கோபுரங்களுள் பிரசித்தமானதும் மிக உயரமானதுமான தெற்கு வாசல் 170 அடி (52 மீற்றர்) உயரமுடையது. எஞ்சிய வடக்கு, மேற்கு, கிழக்கு கோபுரங்கள் முறையே 160, 163, 161 அடி உயரம் கொண்டவை.
  • மீனாட்சி ஆலயம் பல உள்ளக மண்டபங்களையும் கொண்டுள்ளது. இவற்றுள் ஆயிரம் கால் (1000 தூண்கள்) மண்டபம் மிகவும் பிரசித்தி பெற்றது.
  • ஆலயத்தின் உள்ளக தூண்கள் சிறந்த கலைநுணுக்க சிற்ப வேலைப்பாடுகளுடனும் இசை மீட்கத் தக்கனவாகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும்.
  • 600 வருடங்களின் மேலான கட்டுமானத்தில் உருவாகியதும் , மிகவும் கலை அம்சம் மிக்கதுமான இந்த ஆலயத்தில் மொத்தமாக 33 மில்லியன் கலை வேலைப்பாடுகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது.
  • ஆலய உட்பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பொற்றாமரை குளமும் , தலவிருட்ஷமான கடம்ப மரமும் ஆலயத்தின் வரலாற்றில் மேலும் சிறப்பு சேர்க்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக