தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 10 ஆகஸ்ட், 2016

உங்க இதயம் ஆரோக்கியமா இருக்கா?.. வாங்க உங்க கால் விரலை வைத்து தெரிஞ்சிக்கலாம்...

உலகில் இதய நோயால் ஏராமானோர் மரணத்தை சந்திக்கின்றனர். இதற்கு தற்போதைய மோசமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை தான் காரணம் என்று சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டும் என்பதில்லை. மேலும் இன்றைய காலத்தில் மக்கள் தங்கள் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை எடுத்து வருகின்றனர்.

சரி, உங்கள் இதயம் ஆரோக்கியமா தான் இருக்கா? அதைத் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? அப்படியெனில் இக்கட்டுரையில் உங்கள் இதயம் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை கண்டறிய உதவும் ஓர் எளிய வழியைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இதய ஆரோக்கியம்
ஒவ்வொருவரும் தங்களின் இதயம் ஆரோக்கியமாக உள்ளதா இல்லையா என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இதனால் திடீரென்று மாரடைப்பால் மரணம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
புதிய ஆய்வு
சமீபத்திய ஆய்வு ஒன்றில், யாரால் கையால் கால்களை மடக்காமல் கால்விரல்களைத் தொட முடிகிறதோ, அவர்களுக்கு இதயம் ஆரோக்கியமாக உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கண்டறியும் முறை
முதலில் தரையில் அமர்ந்து கொண்டு, கால்களை நீட்டி, பின் கையால் கால்விரல்களைத் தொட வேண்டும். அப்படி உங்களால் தொட முடிந்தால், உங்கள் இதயம் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம்.
அமெரிக்க ஆய்வு
அமெரிக்காவின் வடக்கு டெக்ஸாஸில் மேற்கொண்ட ஆய்வில், 20-83 வயதிற்குட்பட்ட சுமார் 526 பேர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வில் ஒவ்வொருவரையும் கால்களை மடக்காமல் கையால் கால்விரல்களைத் தொடுமாறு செய்தனர்.
இரத்த அழுத்தம் மற்றும் இதய செயல்பாடு
இப்படி ஒவ்வொருவரும் முயலும் போதும், அவர்களது இரத்த அழுத்தம் அளவிடப்பட்டது மற்றும் அவர்களின் தமனி மற்றும் இதயத்தின் செயல்பாடும் கூர்மையாக கண்காணிக்கப்பட்டது.
ஆய்வு முடிவு
இந்த ஆய்வின் இறுதியில், இதய பிரச்சனைகள் உள்ளவர்களால் கால் விரல்களைத் தொட முடியாமல் இருப்பது தெரிய வந்தது.
நல்ல நிலை
இந்த முறையால் நேராக அமர்ந்து, கால்விரல்களைத் தொட முடிந்தால், இதயம் நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ளது என்று அர்த்தம். ஒருவேளை முடியாவிட்டால், உங்கள் இதய நோய்கள் வரும் வாய்ப்பு உள்ளது என்றும், இதயத்தில் ஏதேனும் பிரச்சனை இருப்பது போல் இருந்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி உங்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக