தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 1 ஆகஸ்ட், 2016

பச்சை மிளகாயை உணவில் சேர்த்து சாப்பிடும் 120 வயது சாமியார்!

இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்து பக்தர்களை சந்தித்து ஆன்மீக உரை நிகழ்த்தி வரும் சாமியார் சிவானந்தாவுக்கு 120 வயதாகிவிட்டபோதிலும், முகத்தில் எவ்விதி சுருக்கமும் இன்றி 70 வயது முதியவர் போன்று காட்சியளிக்கிறார்.
இவருக்கு, சமீபத்தில் ஏற்பட்ட தலைவலியின் காரணமாக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சோதித்தபோது, உயர் ரத்த அழுத்தம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது,
ஆனால் அதற்கான மாத்திரைகளை சாப்பிடுவதற்கு கூட இவர் தயங்கியுள்ளார், ரத்த அழுத்தத்தை குறைக்க சில வழிமுறைகளை பின்பற்றுகிறேன், அதன்பின்னர் வேண்டுமானால் மாத்திரைகளை உட்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
ஏனெனில், எளிமையான சாப்பாட்டை உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வந்துள்ளார், வேகவைத்து உணவு மற்றும் பச்சை மிளகாயை சாப்பிடுவதே எனது ஆரோக்கியத்திற்கு காரணம் என கூறுகிறார்.
சாமியார்கள் சொகுசு வாழ்க்கை வாழும்போது நீங்கள் ஏன் இவ்வாறு இருக்கிறீர்கள் என்று கேட்டால், சிறுவயதில் எனது சகோதரி என்னை தூக்கிகொண்டு பிச்சையெடுத்தார், எங்களுக்கு அப்போது உணவு கிடைப்பது என்பதே அரிதான ஒன்று என கூறியுள்ளார்.
http://news.lankasri.com/india/03/106724

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக