உடலுக்கு தேவையான புரதம், நார்ச்சத்து, நீர்ச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் மிகுந்து காணப்படுகின்றன.
- பெண்களுக்கு மாதவிலக்கின் போது அதிக உஷ்ணத்தினால் ஏற்படும் வயிற்று வலி நீங்க, பிஞ்சு வெண்டைக்காய் விதைகளை 2 முதல் 5 கிராம் சாப்பிட்டு வர வேண்டும்.
- வெண்டைக்காயில் வேதிச்சத்துகள் இருப்பதால், ரத்தம் உறைதல் மட்டும் ரத்தகட்டிகள் வராமல் தடுக்கிறது.
- வெண்டைக்காயை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் மூளைச் செயலிழப்பு சார்ந்த நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.
- வெண்டைக்காய் பிஞ்சுக்களை மோர் குழம்பு செய்து சாப்பிட்டால் காய்ச்சல், மலச்சிக்கல் நீங்கும்.
- வெண்டைக்காய் சாறுடன் சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் இருமல், நீர்க்கடுப்பு போன்றவை குணமாகும்.
- வெண்டைக்காயை பொடிப் பொடியாக நறுக்கி, வதக்கி தினமும் சாப்பிட்டு வந்தால், படுக்கும் குழந்தைகளுக்கு நினைவாற்றல் மற்றும் சரியாக கணக்கு போடும் ஆற்றல் அதிகரிக்கும்.
- பெக்டின் என்னும் நார்ப்பொருள் வெண்டைக்காயில் இருப்பதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் பருமனை குறைக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறது.
- வெண்டைக்காயின் வேரை காயவைத்து பொடியாக்கி அதை பாலுடன் சேர்த்து குடித்து வந்தால், ஆண்களின் ஆண்மை பெருகும்.
- வெண்டைக்காயை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால், பொலிவான முக அழகினைப் தருகிறது.
- வெண்டைக்காயை தினமும் உணவில் சேர்த்து அதிக அளவில் உட்கொண்டால், குடல்புண் மற்றும் தோலில் ஏற்படும் வறட்சி தன்மையை நீக்குகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக