4 வயதில் -
--> என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை..!
.
6 வயதில் -
--> என் அப்பாவுக்கு எல்லோரையுமே தெரியும்..!
.
10 வயதில் -
--> என் அப்ப நல்ல அப்பாதான். ஆனால் அவருக்கு அடிக்கடி கோபம் வருகிறது..!
.
12 வயதில் -
--> ஹும்..! நான் சின்னவனாக இருந்தபோது அப்பா என் மீது பாசமாக இருந்தார்..!
.
14 வயதில் -
--> என் அப்பா தான் எல்லா விஷயத்தையும் சரியாகச் செய்வதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்
.
16 வயதில் -
--> அப்பா அந்த காலத்து மனிதர். லேட்டஸ்ட் விஷயங்களே தெரிவதில்லை..!
.
18 வயதில் -
--> அப்பா ஏன் இப்படி பல சமயங்களிலும் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கிறார்.?
.
20 வயதில் -
--> அப்பாவுடன் இருப்பதே கஷ்டமாக இருக்கிறது. அம்மா எப்படித்தான் இவரை சகித்துக்கொள்கிறாரோ.?
.
25 வயதில் -
--> என் அப்பாவுக்கு என்ன ஆச்சு.? நான் என்ன செய்தாலும் அதை எதிர்ப்பதையே முதல் காரியமாகச்
செய்கிறாரே.?
.
30 வயதில் -
--> என் மகனை சமாளிப்பது பெரியகஷ்டம்.! நான் சின்னவனாக இருந்தபோது அப்பாவுக்கு எத்தனை பயந்து நடந்தேன்.?
.
40 வயதில் -
--> ஹும்.! அந்த காலத்தில் என் அப்பா என்னை அத்தனை ஒழுக்கத்தோடு வளர்த்தார். நானும் என் மகனை அப்படித்தான் வளர்க்க வேண்டும்..!
.
45 வயதில் -
--> குழந்தைகளை - அதுவும் டீன் ஏஜ் குழந்தைகளை வளர்ப்பது மிகவும் கஷ்டம். என்னை அப்பா எப்படித்தான் சமாளித்தாரோ..?
.
50 வயதில் -
--> எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் என் அப்பா எங்கள் எல்லோரையும் நன்றாக வளர்த்தார். எனக்கு ஒரு மகனையே ஒழுங்காக வளர்க்கத் தெரியவில்லை..!
.
55 வயதில் -
--> என் அப்பா ஒரு தீர்க்கதரிசி. தனித்துவம் மிக்கவர்..!
.
60 வயதில் -
--> என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை..!
.
முதல் நிலைக்கு திரும்பவும் வருவதற்கு ஒரு மகனுக்கு
56 வருடங்கள் பிடித்திருக்கிறது...!!
.
நல்ல வேளையாக உங்களுக்கு அத்தனை வயது ஆகவில்லையெனில், ஏன் தாமதிக்கிறீர்கள் ?
உடனடியாக உங்கள் அப்பாவுக்கு ஒரு ஃபோன் செய்து
அவரை நீங்கள் மிகவும் நேசிப்பதாகச் சொல்லுங்கள்..!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக