தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, February 1, 2013

வர்ணாசிரமம் on நேர் கொண்ட பார்வை!!


சூத்ரோ ப்ராமணதாமேதி ப்ராமணஸ்சைதி சூத்ரதாம்
க்ஷத்ரியாஜ்ஜாதவேதம் து வித்யாத்வைச்யாத்ததைவ ச’



அதாவது – ‘சூத்திரன் பிராமணனாகி விடலாம்; பிராமணனும் சூத்திரனாகலாம்; அதே போல், க்ஷத்ரிய மற்றும் வைசிய வர்ணங்களைச் சார்ந்தவர்களின் மகன்களும், மகள்களும் வேறு வர்ணத்தை அடையலாம்’. ஆக, சூத்திரர்கள் வேதம் கற்கக் கூடாது என்று சொல்லும் அதே மனு தர்மம்தான் அவர்கள் வேதம் ஓதும் பிராமணர்கள் ஆகலாம் என்று சொல்கிறது. இதை மற்றோர் விதமாய் சொல்ல வேண்டுமானால், வேதம் ஓத விருப்பம் தெரிவிப்பவன் பிராமணனாக மாறியே அவ்வாறு செய்ய இயலுமேயன்றி சூத்திரனாகவே இருந்து செய்ய இயலாது. இதில் யாரும் எந்த வகையிலும் தடுக்கப்படவோ ஒடுக்கப்படவோ இல்லை.

அப்ராம்ணாத் அத்யயனம் ஆபத்காலே விதியதே
அனுவ்ரஜா ச சுச்ரூஷா யாவத் அத்யயனம் குரோ:

அதாவது, தவிர்க்க முடியாத காலங்களில் ஒரு பிராமண மாணவன் பிராமணன் அல்லாத குருவிடமிருந்து கல்வி கற்கலாம். அவ்வாறு செய்கையில் அம்மாணவன் அக்குருவிற்கு பணிவிடை செய்ய வேண்டும்.

பிற்போக்கு கண்ணோட்டத்துடன் மனுஸ்ம்ருதியை அணுகும் முற்போக்குவாதிகளின் கண்களில் முன்னுக்குப்பின் முரணாக தென்படும் இந்த தர்மங்களுக்கு பின்னால் ஆதவனென பிரகாசிக்கும் உண்மை – மனுஸ்ம்ருதி ஜாதி அடிப்படையில் அமைக்கப்பட்டது அல்ல என்பதே. ஒரு சமூகத்தின் அனைத்து அங்கங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட்டால் மட்டுமே சமூக நலன் காக்க முடியும் என்ற கருத்தே இந்த தர்ம நூலின் அடிப்படை. அனைவருமே வேதம் கற்க வந்தாலோ அனைவருமே விவசாயம் செய்யத்தொடங்கினாலோ சமூகத்தில் சீரமைப்பு இருக்க வழியில்லை. வழி வழியாக ஒரு தொழிலை ஒரு குடும்பத்தினர் செய்கையில் அவர்கள் ரத்தத்தில் அது ஊறி விடுமென்று மனுஸ்ம்ருதி கூறுவது முட்டாள்த்தனம். ஆனால் ‘ஜீன்’ எனப்படும் மரபணுக்கள் நம் முன்னோர்களிடம் இருந்து வருகிறது. அதன் மூலமாகவே பல குணங்களை நாம் பெறுகிறோம் என்று ஆங்கிலேயன் கூறினால் அது விஞ்ஞானம்! 

எந்த ஒரு தர்ம சாத்திரத்தையும் வார்த்தைக்கு வார்த்தை அமல்படுத்துவது நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு விஷயம்! அது மனு தர்மத்திற்கும் முற்றிலும் பொருந்தும். மனுவின் நீதிகள் அனைத்தையும் ஒரு அரசன் அமல்படுத்த வேண்டியதில்லை. அந்த ராஜ்ஜியத்திற்கு, மக்களின் வாழ்க்கை முறைக்கு எது தேவையோ அவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறே மனுவின் நீதிகளும் கூட வகுக்கப்பட்டுள்ளன.

http://nerkondapaarvai.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/


nerkondapaarvai.wordpress.com
Posts about வர்ணாசிரமம் written by Lakshminarayanan


No comments:

Post a Comment