தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

கத்தரிக்காய் ஊறுகாய் தயார் செய்வது எப்படி!


கத்தரிக்காய் ஊறுகாய் தயார் செய்வது எப்படி!

சாப்பாடு வகைகளுக்கு சுவை கூட்டுவதில் ஊறுகாய்க்கு தனி இடம் உண்டு. அதை சாப்பிட்டு பார்த்தவர்களுக்கே அதன் ருசி

என்ன என்பது தெரியும். கத்தரிக்காய் ஊறுகாய் தயாரிக்க 1 கிலோ கத்தரிக்காய், கடுகு தூள் 50 கிராம், எண்ணை 4 மேஜைக்கரண்டி, வெல்லம் 1 மேஜைக்கரண்டி, மஞ்சள்தூள் 1 மேஜைக்கரண்டி, உப்பு, மிளகாய்த்தூள் சிறிதளவு எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் கத்தரிக்காய்களை சுத்தமாக்கிக்கொண்டு ஒவ்வொன்றையும் நான்கு துண்டுகளாக வெட்டி, தேவையான நீர்விட்டு வேக வைத்து வடிகட்டிக்கொள்ளவும். பின்னர், கடுகுதூள், மிளகாய்தூள், வெல்லம், மஞ்சள்தூள், ஆகியவற்றை ஒன்றாக கலந்து எண்ணையில் தாளித்து வெந்த கத்தரிக்காய் துண்டுகளினுள் சரிசமமாக திணித்துவிட வேண்டும். பின்னர், சுத்தமான தனி பாத்திரத்தில் எடுத்து வைக்க வேண்டும். 4 நாளில் நன்கு ஊறிய பிறகு, கத்தரிக்காய் ஊறுகாயை ருசிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக