தஞ்சை மராத்தியர் ஆட்சியில் பல்வகையான நாணயங்கள் புழக்கத்தில் இருந்ததாகத் தெரிகிறது. ஆவணங்களில் பல இடங்களில் குறிப்பிடப்பெறும் சில நாணயங்களில் 'சக்கரம்' என்பது ஒன்று. மேலும் 'புலிவராகன்', பணம், காசு என்றெல்லாமும் குறிப்பிடப் பெறுகிறது. இதில் பத்துப் பணம் ஒரு சக்கரம் என்று எழுதப்படுகிறது.
இது தவிர சென்னைப்பட்டணம் வெள்ளிப் பணம் என்றொரு நாணயம் குறிப்பிடப்படுகிறது. அதாவது இரண்டரை பணத்துக்கு ஒரு சென்னைப்பட்டனம் வெள்ளிப்பணம். சக்கரத்தில் நாலில் ஒரு பங்கு.
தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள விவரப்படி நாணய மாற்று கீழ்கண்ட முறையில் இருந்திருக்கிறது:
இந்த வராகன் சில இடங்களில் மாறுபட்ட மதிப்பிலும் இருந்திருக்கிறது. பரங்கிப்பேட்டை வராகன் என்றும், நாகப்பட்டினம் வராகன் என்றும் இருந்திருக்கிறது.
நாணய வகைகளில் தங்க நாணயமும் இருந்திருக்கிறது. இது அதிக அளவில் சாதாரண மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்திருக்கவில்லை. இது தவிர 'ஹொன்னம்' எனும் நாணய மதிப்பு பற்றியும் சில குறிப்புகள் வருகின்றன. கோணிக்காசு என்றும், சாணார்காசு என்றும், கிணிகாசு என்றும் சிலவகை நாணயங்கள் இருந்திருக்கின்றன.
திருமருகல் எனும் ஊரில் அமரசிம்மன் காலத்தில் ஒரு நாணயம் உற்பத்திச் சாலை இருந்திருக்கிறது.
----------------
தஞ்சையில் மராட்டியர் ஆண்ட காலத்தில் புலிவராகன் என்ற மற்றொரு வகைக் காசும் பேசப்படுகிறது. ஒரு புலிவராகனின் மதிப்பு 4 1/2 ச்க்கரம் அல்லது 45 பணம். ஒரு பணம் - 32 காசு. அந்தக்கால (1799) மதிப்பில் ஒரு கலம் நெல்லுக்கு விலை 3 1/2 (மூன்றரை) பணம். பத்து பணம் = 1 சக்கரம்.
இந்தத் தங்க வராகன் தவிர 2 1/2 சக்கரம் மதிப்புள்ள வெள்ளி புலிவராகனும் புழக்கத்தில் இருந்தது.
மேலும், ஒரு வராகனுக்கு 2 சக்கரம் + 8 பணம் மதிப்புள்ள பரங்கிப்பேட்டை வராகனும், ஒரு வராகனுக்கு 2 சக்கரம் + 8 3/4 பணம் மதிப்புள்ள நாகப்பட்டணம் வராகனும் கூடஆளுமையில் இருந்திருக்கிறது.
மராட்டிய கால நாணயங்களைத் தயாரிக்கும் நாணயச்சாலை (mint) திருமருகல் என்ற ஊரில் இருந்தது.
(திரு நடன. காசிநாதன் எழுதிய 'தமிழர் காசு இயல்' நூலில் இருந்து - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு)
யார் கிட்டேயாவது இந்த காசு இருக்கா?
http://mypno.com/index.php?option=com_content&view=article&id=6732%3A2013-02-13-09-48-38&catid=36%3Amytown&Itemid=76
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக