விவேகானந்தா...
தற்போது நீங்கள் பெற்றுவரும் கல்வியில் சில நல்ல அம்சங்கள் இருக்கின்றன. ஆனால் அதிலுள்ள ஒரு பெரிய குறைப்பாட்டினால் அந்த நல்ல அம்சங்கள் எல்லாம் அமிழ்த்தப்பட்டு விடுகின்றன. முக்கியமாக, அது மனிதத் தன்மை அளிக்கும் கல்வியன்று; முழுதும் எதிரமறைக் கல்வி.இது கெட்டது, அது கெட்டது என்றே எப்பொழுதும் கூறும் எதிர் மறையான பயற்சி மரணத்தை விடக் கொடியதாகும்.இப்பொழுது நம் நாட்டில், குழந்தை பள்ளிக்கூடம் சென்றதும் முதன் முதலில் கற்றுக்கொள்வதென்ன? தன் தந்தை மூடன் என்பதே ஆகும். இரண்டாவது, தன் பாட்டன் பெரிய பைத்தியக்காரன் என்றும், மூன்றாவது, தன் ஆசிரியர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்றும், நான்காவது, சாஸ்திரங்கள் எல்லாம் வெறும் பொய்க் களஞ்சியங்கள் என்றும் அவன் கற்றுக்கொள்கிறான். அவனுக்குப் பதினாறு வயது ஆகும் போது, உயிரற்ற, எலும்பற்ற, எதிர்மறை பிண்டமாக இருக்கிறான். எல்லாம் அவனுக்குக் கெடுதாலகவே காணப்படுகின்றன.
அப்பப்பா! பி.ஏ. பட்டத்திற்காக என்ன தடபுடல்? என்ன ஆர்ப்பாட்டம்? சில நாளைக்குள் அவ்வளவும் பறந்து விடுகின்றன. கடைசியில் அவர்கள் கற்றுக்கொள்வது என்ன? நம்முடைய சமயம் 'பழக்கவழக்கங்கள் எல்லாம் கெட்டவை என்றும், மேலை நாட்டினருடையவெல்லாம் நல்லவை என்றும் கற்றுக் கொள்கிறார்கள்; அவ்வளவுதான்! இக்கல்வியினால் அவர்கள் தங்கள் பசிப்பிணியைக்கூட நீக்கி கொள்ள முடிவதில்லை. இத்தகைய உயர்தரக் கல்வி இருந்தாலென்ன? போனாலென்ன? இதைவிட மக்கள் சிறிதளவு தொழிற்கல்வி பெறக்கூடுமானால் நன்மை உண்டு. 'வேலை,வேலை' என்று அடித்துக்கொண்டு திரிவதற்குப் பதிலாக அவர்கள் ஏதேனும் தொழில் செய்து பிழைத்துக் கொள்வார்கள்.
கழுதையை நன்கு புடைத்தால் அது குதிரையாகிவிடும் என்று யாரோ சொல்லக் கேட்டு அவ்விதமே ஒருவன் செய்தான் என்றொரு கதை உண்டு. இத்தகைய முறையிலேயே நமது சிறுவர்களுக்குக் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. இம்முறை தொலைய வேண்டும்.
படித்தவர்கள் என்று உங்களை நினைத்து கொண்டிஇருக்கிரர்கள்! என்ன மண்ணாங்கட்டியைப் படித்து விட்டிர்கள் ? மற்றவர்களின் கருத்துகளை திருப்பிச் சொல்லக் கற்றிருக்கீர்கள்! அயல்மொழியில் படித்து , மனப்பாடம் செய்து உங்கள் மூளையை நிரப்பி கொண்டு .சில பட்டங்களை வாங்கிக் கொண்டிஇருக்கிரர்கள்! சீ, சீ இதுவா படிப்பு ? உங்கள் படிப்பு பின் லட்சியம் என்ன ? ஒரு குமாஸ்தா வேலை அல்லது ஒரு கேடு கெட்ட வக்கீல் , அதிகம் போனால் குமாஸ்தா வேலையின் பரிணாமமான ஒரு துணை நீதிபதி – இதுதானா!.. ஒரு முறை கண்களை திறந்து பார் . பொன் விளையும் பூமியான இந்த பாரத திரு நாட்டில் ஒருபிடி உணவிற்காக மக்கள் அல்லாடும் பரிதாபமான நிலை பார் . உங்கள் படிப்பால் இந்த பரிதாப குரல்களின் தேவை நிறைவேறுமா ? ஒரு போதும் நிறைவேறாது.
இளமையிலிருந்து நாம் பெறுவது எதிர்மரையனா கல்வி. நாம் உதவாக்கரைகள் என்றே நாம் கற்று வருகிறோம் . நமது நாட்டில் பெரிய மனிதர்கள் எல்லாம் பிறந்தார்கள் என்பது நமக்கு தெரியாது. உடன்பாட்டு முறையிலான கல்வி எதையும் பெற வில்லை . கைகளையும் கால்களையும் எப்படி பயன் படுத்துவது குட நமக்குத் தெரியாது . ஆங்கிலயேர்களின் ஏழு தலைமுறை முன்னோர்கள் ஒன்று விடாமால் படித்தோம் ; ஆனால் நமது முன்னோர்கள் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது; பலவினத்தை கற்று கொண்டோம் . வெல்லப்பட்ட இனமான நாம் பலவினர்கள் , சுததிரமாக ஏதும் செய்யா முடியாதவர்கள் என்று கற்று கொண்டோம். இந்த நிலையில் சிரத்தை எப்படி போகுமால் இருக்கும் ? சிரத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் ; தனம்பிக்கை மறுமலர்ச்சி பெற வேண்டும் . அப்போது நமது நாட்டின் பிரச்சனைகள் எல்லாம் தாமாக படிப்படியாக தீர்ந்து போகும்.
மனிதனுக்குள் ஏற்கெனவே இருக்கும் பூரணத் துவத்தை வெளிக் கொணரச் செய்வதே கல்வி ஆகும்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக