எள்ளுரண்டை:
கோயமுத்தூர் பக்கம் கிராமங்களில் நிறைய பேரு ஊட்டுல ஒரு காலத்துல அதிகமா செய்யப்பட்ட இந்த இனிப்பு பலகாரம் இன்னைக்கு பல சரக்கு பல்பொருள் அங்காடிகளில் மட்டுமே கிடைக்கும் பொருளாக மாறிவிட்டது .. அந்த காலத்துல எல்லாரு வீட்லயும் ஒரு உரல் இருக்கும்ங்க அதுல வறுத்த எள்ளையும் மண்டை வெல்லத்தையும் போட்டு குத்தி எடுத்து உருண்டை புடிப்பாங்க .. அருமையான ருசியா இருக்கும்ங்க .. இப்ப கடைகளில் முழு எள்ளு உருண்டை தான் கெடைக்குதுங்க .. இடிச்சு புடிக்குற உருண்டயோட ருசியே தனிங்க .. அதுவும் இடிச்சு முடிச்சு அவிக எடுத்துட்டு போனதுக்கு அப்புறம் ஒரலை நக்குரதுக்கு சண்டையே நடக்கும்ங்க .. இதை எழுதி முடிச்ச உடனே அம்மா கிட்ட எள்ளுருண்டைக்கு ஒரு அப்ளிகேசன் போட்டுருவனுங்க ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக