தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, February 10, 2013

நாலடியார் : சினமின்மை


நாலடியார் : சினமின்மை
==================
மதித்திறப் பாரும் இறக்க மதியா
மிதித்திறப் பாரும் இறக்க - மிதித்தேறி
ஊயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்
காயும் கதமின்மை நன்று.

விளக்கம்:
தம்மை மேன்மைப்படுத்திச் செல்லுகிறவர்களும் செல்லுக; மதியாமல் தம்மைக் கீழ்ப்படுத்திச் செல்லுகிறவரும் செல்லுக; பறக்கும் ஈயும் நம்மை மிதித்து நம் மேலேறித் தலையின் மேல் இருப்பதனால் அதை அறிந்தவர் சுடும்படியான கோபம் இல்லாதிருப்பது நல்லது.

No comments:

Post a Comment