தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 7 பிப்ரவரி, 2013

நிரந்தரமாக அழித்த கோப்புகளை மீட்பது எப்படி?(மென்பொருள் இல்லாமல்!)

 

நிரந்தரமாக அழித்த கோப்புகளை
இது விண்டோஸ் 7-இல் இருக்கும் ஒரு பயனுள்ள வசதி என்று கூறலாம். அந்த வசதியின் பெயர் "முந்தைய பதிப்புகள்",ஆங்கிலத்தில் Previous Version எனப்படும்.

Previous Version?

Previous Version என்பது கோப்புகளின் முந்தைய பதிப்பு ஆகும், சுருக்கமாக ஒரு பெட்டகம் என்று வைத்துக்கொள்வோம்.இந்த வசதியின் மூலம் நீங்கள் நிரந்தரமாக ஒரு இயக்கியில் (local disk) அழித்த கோப்புகளை எளிதாக மீட்க முடியும்! இது நீங்கள் ஒவ்வொரு முறை அந்த இயக்கியில் அழித்த அல்லது திருத்தம் செய்த கோப்புகளை மீட்டிக் கொண்டே வரும் அதனோடு அந்நேரத்தில் அந்த இயக்கி எப்படி இருந்ததோ அப்படியே காட்டும் அதனை நீங்கள் திறந்து /நகலெடுத்து/மீட்டிக் கொள்ளலாம்.

இது எப்படி வேலை செய்கிறது?

இந்த வசதியை நீங்கள் திறந்து வைத்தால் இது கோப்புகளுக்கான ஒரு மீட்பு பகுதியை உருவாக்கும் (restore point ). இந்த மீட்பு பகுதியின் மூலம் உங்களது அழிந்த கோப்புகளை மீட்டிக் கொள்ளலாம்!
கவனிக்க:- இதனை திறந்து வைத்த பிறகே நீங்கள் அழிக்க அல்லது திருத்தம் செய்யப்போகும் கோப்புகளை மீட்டித் தரும்.

இதனை திறந்து வைப்பது எப்படி?

(கிழே உள்ள படங்களை பார்த்து படிப்படியாக செய்யவும்....)


1.My Computer -->System Protection.



2. இது எந்த எந்த இயக்கியில் (local disk ) இந்த வசதி உள்ளது என்று குறிப்பிடும். இதன் மூலம் நீங்கள் உங்களுக்கு தேவையான இயக்கியில் மட்டும் இந்த வசதியை நிறுவ முடியும்.

3. நீங்கள் ஒன்று அல்லது பல இயக்கியில் இந்த வசதியை நிறுவ விரும்பினால் அந்த அந்த இயக்கியை சொடுக்கி configure என்பதனை அழுத்த வேண்டும்.

4. இதனை கடைசியாக பாப்போம்.





5. இது அந்த இயக்கியில் எதனை மீட்க வேண்டும் என்பதனை குறிப்பிடும். நீங்கள் அந்த இயக்கியில் அந்த இயக்கியின் அமைப்பையும் மற்றும் கோப்புகளையும் மீட்க விரும்பினால் முதலில் உள்ளதை சொடுக்கவும் அல்லது இயக்கியில் உள்ள கோப்புகளை மட்டும் மீட்க விரும்பினால் இரண்டாவதாக உள்ளதை சொடுக்கவும் அல்லது எதுவுமே வேண்டாம் என்றால் மூன்றாவதாக உள்ளதை சொடுக்கவும்.இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் ஒவ்வொரு முறை அந்த இயக்கியில் மாற்றம் செய்யப்போகும் அல்லது அழிக்க போகும் கோப்புகளை மீட்டிக் கொண்டே வரும்.

6. இந்த பகுதி அந்த இயக்கியில் எவ்வளவு வரை மீட்க வேண்டும் என்பதனை குறிப்பிட.இது நீங்கள் அந்த இயக்கியில் எவ்வளவு திருத்தம்/அழித்தல் செய்கிறீர்கள் என்பதை பொறுத்து குறிப்பிட்டுக் கொள்ளுங்கள்.நீங்கள் அதிகமாக இடம் கொடுத்தால் ஆடி,அம்மாவாசையில் அழித்த அல்லது திருத்தம் செய்த கோப்புகளும் இருக்கும்!
இப்பொழுது இந்த வசதியை முழுவதுமாக நிறுவி விட்டீர்கள்!தொடர்ந்து விட்டதை பாப்போம்!

4. இது நீங்கலாக ஒரு மீட்பு பகுதியை உருவாக்கி மீட்டி எடுக்க!

7. இது இதுவரை விண்டோஸ் மீட்டி எடுத்த கோப்புகள் அனைத்தையும் அழித்து புதிதாக தொடங்க.

8.சரி,இப்பொழுது நீங்கள் ஒரு இயக்கியில் சில கோப்பினை அழித்து விட்டீர்கள் அதனை எங்கு சென்று எடுப்பது? என்ற கேள்வி இப்பொழுது உங்களிடத்தில் எழும்,அக்கோப்பினை எடுக்க நீங்கள் எந்த இயக்கியில் அக்கோப்பினை அழித்தீர்களோ அங்கு சென்று வலச் சொடுக்கி -->Properties -->Previous Version. அங்கு சென்றவுடம் இப்படி இருக்கும்....
அதில் நீங்கள் இதுவரை செய்த திருத்தங்கள்/அழித்தல்கள் எல்லாம் இருக்கும்(நேரமும் தேதியும் குறிப்பிட்டு இருக்கும்).இது ஒரு தனிப்பட்ட கோப்புக்கும் பொருந்தும்.

கவனிக்க:- சில நேரங்களில் விண்டோஸ் சில கோப்புகளை மீட்டெடுக்காது! அச்சமயம் என்னை திட்டவோ பழிக்கவோ கூடாது! அதற்கு நான் பொறுப்பல்ல!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக