ஒரு நாள் மண உறவு: இஸ்லாமிய பாலியல் சுதந்திரம்
"திருமணம் ஒரு வகை சட்டபூர்வ விபச்சாரம்." என்று கூறினார் பெரியார். தற்காலிக திருமண பந்தத்தை சிலர் விபச்சாரத்திற்கான போர்வையாக பயன்படுத்துகின்றனர். சில கிரிமினல்கள் இதை பயன்படுத்தி பெண்களை விபச்சாரத்திற்கு தள்ளியமை கண்டுபிடிக்கப்பட்டது.
லெபனானில் ஷியா பிரிவு முஸ்லிம்கள், சட்டப்படி பல வாழ்க்கைத் துணைகளை மாற்றும் பாக்கியசாலிகள். இளம் வயதினருக்கான ஒன்றுகூடலில் உங்கள் மனங்கவர்ந்த ஆணை/பெண்ணை தெரிவு செய்யுங்கள். மதகுரு ஒருவரின் முன்னிலையில் தற்காலிக திருமணம் செய்து கொள்ளுங்கள். அந்த திருமணம் பந்தம் குறைந்தது ஒரு மணி நேரம், கூடியது ஒரு வருடம் நீடிக்கலாம். அதற்குப் பிறகு மண விலக்கு பெற்று இன்னொரு துணையை மணம் முடிக்கலாம்.
சிலர் தற்காலிக திருமண முறை சமுதாய அக்கறையின் பாற்பட்டதாக கூறுகின்றனர். போரினால் கணவன்மாரை இழந்த விதவைகள் இந்த திட்டத்தின் மூலம் பலன்பெற்றுள்ளதை மறுக்க முடியாது. அதே போல இறுக்கமான கட்டுப்பாடுகளை கொண்ட முஸ்லிம் சமுகத்தில் பிறந்த இளைஞர்கள் ஏங்கும் சுதந்திரத்தை நிதர்சனமாக்குகிறது. ஆனால் பெரும்பாலான இளைஞர்களுக்கு பாலியல் கவர்ச்சியே முதன்மையானதாக உள்ளது. இரு வருடங்களுக்குள் நூற்றுக்கணக்கான துணைகளை மாற்றியதாக சிலர் தெரிவித்தனர். மறு பாலாரின் கவர்ச்சியால் ஈர்க்கப்படும் இளம் சமுதாயம், ஹிஸ்புல்லாவின் அரசியல் கூட்டங்களுக்கு அள்ளுப்பட்டு போகின்றது. முதலில் தனக்கென துணை தேடும் ஆர்வத்துடன் வருவோர், மெல்ல மெல்ல ஹிஸ்புல்லாவின் அரசியல் கருத்துகளை உள்வாங்கிக் கொள்கின்றனர். உறுப்பினர் தொகையை அதிகரிக்கவும், மத நம்பிக்கைகளை ஊட்டுவதற்கும் இது ஒரு குறுக்குவழி. இந்த நடைமுறை ஏற்கனவே நம்மூர் இந்துக் கோயில்களில்/கிறிஸ்தவ தேவாலயங்களில் இருப்பதாக சொல்கிறீர்களா? அதுவும் சரி தான்.
http://
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக