தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 19 மார்ச், 2014

பாவம் செய்ததால் மன வருத்தமா? .................................................எல்லா மதமும் சமம் எனும் மூடர் கருத்து!


தப்பு செய்யக்கூடாது. தப்பித்தவறி செய்ய வேண்டியசூழ்நிலை வந்து விட்டால் இறைவனிடம், அதை நாம் செய்ய நேர்ந்ததின் அவசியத்தைச் சொல்லி, நம்மை மன்னிக்கும்படி கெஞ்ச வேண்டும். அப்படி செய்தால், அவன் நம்மைக் காப்பாற்றுவான்.ஹஸரத் அபூ அமர் நுஜைத் (ரலி) அவர்களின் ஆசானாகஇருந்தவர் ஹஸரத் அபூ உத்மான் ஹீரீ (ரலி) அவர்கள். ஒருமுறை, ஆசானிடம் சென்ற அபூ அமர், அவரது முன்னிலையில்,அல்லாஹ்விடம்,தான் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டு,இனி தப்பு செய்யமாட்டேன் என்ற உறுதியும் எடுத்தார்.ஆனால், சில காலம் கழித்து ஒரு தவறு செய்ய வேண்டிய சூழ்நிலைஏற்பட்டு விட்டது.இறைவன் சாட்சியாக ஆசானிடம் உறுதி கொடுத்தோம். இப்போது உறுதியை மீறி விட்டோம். மனசாட்சி தினமும்கொல்கிறது என வருத்தப்பட்டார். ஆசானை எங்காவது பார்க்க நேர்ந்தால், அவரது முகத்தில் விழிக்க வெட்கப்பட்டு, மறைந்து கொண்டார்.ஒருமுறை அவரை நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய கட்டாயம்ஏற்பட்டது. அவர் சொன்னார், நீங்கள் பாவம் செய்வதாக இருந்தால், உங்கள் பகைவர்களுக்கு தெரியாமல் செய்யுங்கள். ஏனெனில்,அவர்கள் நீங்கள் செய்யும் பாவங்களை பகிரங்கப்படுத்தி உங்களைக் கேலி செய்து மகிழ்ச்சியடைவார்கள். எப்போது பாவம் செய்யவேண்டுமென உங்களுக்கு தோன்றுகிறதோ, அப்போது என்னிடம் வாருங்கள். ஏனென்றால், என்ன கஷ்டத்தால் நீங்கள் பாவம் செய்ய விரும்புகிறீர்களோ, அதைப் புரிந்து கொள்ளும் சக்தியும், தாங்கும்சக்தியும் எனக்கிருக்கிறது, என்றார்.இப்படி ஆசான் சொன்னபிறகு, யாருக்காவது பாவம் செய்யத் தோன்றுமா? அதுமுதல் அபூ அமர் பாவமே செய்யவில்லை...
 —

Kokkuvil Nanthaavil Amman

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக