பூமி முழுவதும் விசித்திரம் மிக்க பல இடங்கள் காணப்படுகின்றன. இவற்றிக்கு அறிவியல் ரீதியில் அல்லது வரலாற்று ரீதியில் நம்பத்தகுந்த பதில்கள் கூறப்படுவதில்லை.
அதனால் அவற்றினை அமானுஷ்யம் அல்லது மர்மம் என்ற வரையறைக்குள் வைத்து விட்டு, பல்வேறுபட்ட காரணங்கள் நம்ப வைப்பதற்காக சொல்லப்படும்.
ஒரு வகையில் இவ்வாறான விடை தெரியாத விசித்திரங்கள் இருக்கின்ற காரணத்தினாலேயே பூமியானது கடவுளின் படைப்பாக நம்பப்படுகின்றது எனவும் பல தரப்பட்டோர் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதிசய உலகின் மறுபக்கங்களாக காணப்படும் குறிப்பாக, சரியான பதில்கள் கூறப்படாத அமானுஷ்ய இடங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.
விசித்திர ஏரி
கொலம்பியாவில் ஒசொயுஸ் இடத்தில் காணப்படும் இந்த ஏரி சலைன் எல்கலி ஏரி saline alkali lake என அழைக்கப்படுகின்றது. சுமார் 10 கனிமங்களைக் கொண்ட இந்த ஏரி பார்ப்பதற்கு நிலவின் மேல் தளம் போன்று காணப்படுகின்றது.
இந்த ஏரியில் உள்ள கனிமங்கள் காரணமாக நீர் ஆவியாகின்ற காரணத்தினால் ஓட்டை விழுந்த ஏரியாக இது கூறப்பட்டாலும், அந்த கனிமங்களின் தன்மை, காலத்திற்கு ஏற்ப நிறம் மாறும் இதன் அமைப்பு பற்றி சரியாக எதுவும் வெளியிடப்படவில்லை.
பேய்களின் பள்ளத்தாக்கு
கலிபோர்னியாவில் உள்ள Racetrack Playa எனப்படும் பள்ளத்தாக்கு ஓர் அமானுஷ்ய இடம். இங்கு கற்கள் தானாக நகர்ந்து செல்லும். இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் இது பேய்களின் வேலை எனக் கூறுகின்றனர்.
மிகப்பெரிய கற்களும் கூட வெவ்வேறு திசையில் தான்தோன்றித்தனமாக பயணிக்கும். இன்று வரை எப்படி இது நடக்கின்றது என சரியான காரணங்கள் கூறப்படவில்லை.
ஆனாலும் நிலத்தின் களிமண் தன்மை, அதிர்வு, காற்று என பல காரணங்களை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் கற்கள் வெவ்வேறு திசையில் நகர்ந்து கொண்டு செல்வது சாத்தியமற்றது. இதற்கு மௌனமாக இருக்கின்றனர் அதே ஆய்வாளர்கள்.
பாலைவனத்தின் மர்மக்கண்
பிரமாண்டமான சஹாரா பாலைவனத்தில் ரிச்சட் வடிவம் Richat Structure ஒன்று உள்ளது. பாலைவனத்தின் நடுவே வண்ணமயமான கண் போன்று இது அமைந்துள்ளது.
இதற்கான காரணம் கூறப்படாவிட்டாலும் ஆச்சரியம் மிக்க வகையில், தொல்பொருள் ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்ட கல்வெட்டுகளிலும், மட்பாண்டங்களிலும் இதே வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு விண்வெளியின் ஓர் பால்வீதியின் அமைப்பினையும் ஒத்ததாக இந்த இடம் அமையப்பெற்றுள்ளமை மேலும் ஆச்சரியமே.
அதனால் இது செயற்கையாக உருவாக்கப்பட்டது என்ற ஓர் கருத்து இருந்தாலும் யார்? ஏன்? எப்படி? என்ற கேள்விகளுக்கு விடை கூறப்படாததால் ஆய்வில் மட்டும் உள்ளது இது வரையில்.
வேற்றுக் கிரகத் தீவு
சொகொட்ரா தீவு Socotra Islands இது ஆச்சரியங்களின் உச்சம். அதாவது இங்கு உள்ள தாவரங்கள் உயிரினங்கள் எதுவுமே பூமியில் வேறு எங்குமே இல்லை. பூமிக்கு சற்றும் தொடர்பு இல்லாத வகையில் இந்த தீவு உள்ளது.
இதனால் பூமியில் வேறு ஓர் உலகத்தையே காட்டும் வகையில் அமையப்பெற்றுள்ளது இந்த மர்மத் தீவு. அதனால் வேற்றுக்கிரகத் தீவு எனவும் இந்தத் தீவு அழைக்கப்படுகின்றது.
வேற்றுக்கிரகங்களில் இருந்து வந்த கனிமங்கள், கூறுகள் மூலம் இந்த மாற்றம் நிகழ்ந்து இருக்கலாம் என்று கூறப்பட்டாலும், அதிசயத் தீவான இதனைப்பற்றிய உண்மைகள் எங்கும் இல்லை.
மின்னல்களின் ஏரி
வெனிசுலா பகுதியில் காணப்படும் நதியின் ஓர் பகுதியான ஏரியை வருடத்தின் 260 இரவுகளையும் மின்னல்கள் நிரப்பும். அதி உயர் அதிர்வெண்களைக் கொண்ட மின்னல்கள் தொடர்ந்தும் இந்தப் பகுதியைத் தாக்கிக் கொண்டே இருக்கும்.
மின்னலை புகைப்படமாக்குவதும் இந்த இடத்தில் சாதாரணம். காரணம் அதிகமான மின்னல்கள் தொடர்ந்து தாக்கிக் கொண்டே இருக்குமாம்.
நிமிடத்திற்கு சுமார் 30 தொடக்கம் 40 மின்னல்கள் இந்த ஏரியில் தாக்கப்படும். சுற்றியுள்ள சிகரங்களின் அமைப்பும், ஏரியின் ஈரப்பதம் போன்றவையின் காரணமாக இவ்வாறு மின்னல்கள் கோபத்தை காட்டுவதாக கூறப்பட்டாலும்.,
உண்மைத் தன்மை கூறப்படுவது இல்லை. இவ்வாறு தொடர்ந்து வரும் மின்னல்களை மின்சாரமாக உருவாக்க முடியும் என விஞ்ஞானம் கூறுகின்றது ஆனால் யார் மீது கொண்ட பயமோ இதனை விஞ்ஞானிகள் சீண்டவில்லை.
இவை தவிர்ந்த இன்னும் பல விடயங்கள் பூமி முழுதும் சிதறிக்கிடக்கின்ற அவற்றிக்கு பின்னால் உள்ள உண்மை மறைக்கப்பட்டாலும் அறிவியல் ஓர் நாள் தெளிவு படுத்தும்.
இவை தவிர பூமியில் செயற்கையாக மனிதனால் சாத்தியமற்ற படைப்புகள் எண்ணற்ற அளவில் எம்மைச்சுற்றி காணப்படுகின்றன அவை அனைத்தும் கேள்விகளை மட்டுமே இதுவரை எழுப்புகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக