தர்பூசணி விதைகளின் மருத்துவ நன்மைகள்
- ஒரு கையளவு தர்பூசணி விதையை 1 லிட்டர் நீரில் சேர்த்து 15 நிமிடம் கொதிக்க வைத்து, பின் அதை வடிகட்டி 3 நாட்கள் தொடர்ந்து இந்த பானத்தைக் குடித்தால், ரத்த சர்க்கரையின் அளவு குறைவதோடு, சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படும்.
- இதயம் ஆரோக்கியமாக இருக்க, தர்பூசணி விதைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்நீரை தொடர்ச்சியாக குடித்து வர வேண்டும் என்று ஆய்வு கூறுகிறது.
- அழகான மற்றும் வலிமையான தலைமுடி வேண்டுமெனில், அதற்கு தர்பூசணி விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரை குடித்து வந்தால், தலைமுடி உதிர்வது, தலை அரிப்பு போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படும்.
- தர்பூசணி விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது. இது சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தைத் தடுக்கும். தர்பூசணி விதையால் தயாரிக்கப்பட்ட தேநீரைக் குடிக்க வேண்டும்.
- தர்பூசணி விதைகளில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த தேவையான ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் விட்டமின்கள் உள்ளது. எனவே அதற்கு தர்பூசணி விதையை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்.
- தர்பூசணி விதைகள் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதற்கு தர்பூசணி விதைகளில் உள்ள அர்ஜினைன் என்னும் உட்பொருள் தான் முக்கிய காரணமாகும்.
- தர்பூசணி விதையில் உள்ள அர்ஜினைன் மற்றும் லைசின் போன்ற அமினோ அமிலங்கள் வலிமையான எலும்புகள் மற்றும் திசுக்கள் மனித உடலின் சீரான செயல்பாட்டிற்கு உதவுவதுடன், எலும்புகள் மற்றும் திசுக்களை வலிமைப்படுத்துகிறது.
- தர்பூசணி விதைகளில் உள்ள விட்டமின் B காம்ப்ளக்ஸ், நியாசின், ஃபோலேட், தயமின், வைட்டமின் B6 போன்றவை ஏராளமான அளவில் உள்ளது. இது நரம்பு மண்டலத்தின் இயக்கத்திற்கு பெரிதும் உதவுகிறது.
http://news.lankasri.com/health/03/124836?ref=right_related
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக