ஜோதிடத்தில் பலவகை இருக்கின்றன, நாடி ஜோதிடம், எண் ஜோதிடம், கிளி ஜோதிடம், கை ரேகை ஜோதிடம், குறி சொல்லுதல் என மனிதர்களின் கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் பற்றி கூற பல முறைகள் கடைபிடிக்கப்படுவதை நாம் நமது ஊர்களில் பார்க்க முடிகிறது.
ஆனால், இதில் எதை நம்புவது, எது சரியானது என யோசிக்க ஆரம்பித்தால் கிறுக்கு பிடிக்கும் படி ஒவ்வொருவர் அவரவர் செய்யும் தொழில் தான் சுத்தமானது என்று கூறுவார்கள். இதைக் குறைக்கூற முடியாது. பெரும்பாலும் நாம் நம்புவது நட்சத்திரம் ஜாதகம் வைத்து பார்க்கப்படும் ஜோதிடம் மற்றும் கை ரேகை வைத்து கூறும் ஜோதிடம் தான்.
இதில் கை ரேகை ஜோதிடம் என்று எடுத்துக் கொள்ளும் போது உள்ளங்கை ரேகைகளை வைத்தே, செல்வம், வேலை, திருமணம், ஆயுள் போன்றவற்றை கூறுவார்கள். இந்த வகையில் ஒருவரது கையில் "M" வடிவிலான ரேகை அமைந்திருந்தால் அவரது வாழ்க்கை (அ) குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என்று இனிக் காண்போம்....
"M" வடிவிலான ரேகை
இந்த "M" வடிவிலான ரேகையானது, மூளை, இதயம், விதி மற்றும் வாழ்க்கை போன்ற ரேகைகளின் கலவை ஆகும். இவை மொத்தமும் சேர்ந்து "M" போன்ற வடிவில் உள்ளங்கையில் சிலருக்கு அமைந்திருப்பதை காண முடியும்.
வலது கை
இதுபோன்று "M" வடிவிலான ரேகை வலது கையில் அமைந்திருந்தால், அவர்களுக்கு செல்வம், பொருள் விஷயங்கள் மற்றும் தர்க்கமானவை (Logic)கிடைக்கப்பெறும்.
இடது கை
இதுபோன்று "M" வடிவிலான ரேகை இடது கையில் அமைந்திருந்தால், அவர்களுக்கு தாய், தாரம் மற்றும் உணர்வு ரீதியானவற்றில் நிறைய சிறப்புகள் அமையும்.
தலைமை வகிப்பது
உள்ளங்கையில் M வடிவிலான ரேகை அமைந்திருந்தால் அவர்கள் இயற்கையாகவே தலைமை வகிக்கும் குணாதிசயம் பெற்றிருப்பார்கள் என்று பண்டையக் காலத்து பாரம்பரியத்தில் கூறப்பட்டுள்ளது.
வலிமையான உள்ளுணர்வு
"M" வடிவிலான ரேகை உள்ளவர்களுக்கு வலிமையான உள்ளுணர்வு இருக்குமாம். இவர்களால் வஞ்சகம் செய்வது போன்றவற்றை முன்னரே கண்டறிய முடியும் என்றும், பெண்கள் மத்தியில் இது அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
நல்ல வாய்ப்புகள்
இயற்கையாகவே தலைமை வகிக்கும் தன்மை உள்ள இவர்களுக்கு, வசதி வாய்ப்புகள், நல்ல எதிர்காலம் மற்றும் சிறந்த வாய்ப்புகளும் அமையப் பெறுவார்கள்.
நல்லுணர்வு
உள்ளங்கையில் "M" வடிவிலான ரேகை அமைந்திருப்பதும், நல்லுணர்வுக்கும் இணைப்பு உள்ளது என்றும் கூட சிலர் கூறுகிறார்கள்.
கை ரேகை குறித்த சிறு வரலாறு
ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு பண்டையக் காலத்தில் இந்துக்கள் ஜோதிட முறையில் கடைபிடிக்கப்பட்டு வந்தது என்று பெரும்பாலும் கூறப்பட்டாலும் இந்த கை ரேகை முறை முதலில் பயிற்சியில் இருந்தது சீனாவில் என்று சீன புத்தகமான "i ching"-ல் கூறப்பட்டுள்ளது என சில வரலாற்று கூற்றுகள் கூறுகின்றன. இந்த புத்தகத்தை தந்திர / செய்யுள் திரட்டு புத்தகம் என்றும் கூறப்படுவதுண்டு.
அரிஸ்டாட்டிலிடம் இருந்து அலெக்சாண்டர் வரை
ஆசிய கண்டத்தில் பிறந்திருந்தாலும் இந்த கை ரேகை பயிற்சி பண்டையக் காலத்திலேயே ஐரோப்பிய கண்டம் வரை பரவியிருந்தது. இதை பற்றி அரிஸ்டாட்டில் படித்து அதை அலெக்சாண்டருக்கும் கற்பித்தார் எனவும், அதன் படி தனது இராணுவ அதிகாரிகளின் குணாதிசயங்கள் குறித்து மதிப்பீடு செய்ய, அறிய இதை அவர் பயன்படுத்தியதாகவும் கூட சில வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால், இது எந்தளவு உண்மை என தெளிவாக தெரியவில்லை.
பொதுவான பயிற்சி
ஜோதிடம் என்பது ஒருவகையான அறிவியல் என்றும் நட்சத்திர கூட்டமைப்பை வைத்து வகுக்கப்படுவது என்றும் கூறப்படுவதுண்டு. இது இப்போது பொதுவான பயிற்சியாக இருப்பினும். அதிகப்படியான போலிகளால் மற்றும் அறிவியல் வளர்ச்சியினால் இது நம்பிக்கைக்கு உரியதாக இல்லை என மக்கள் கருதுகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக