இயல், இசை, நாடகம் இம்மூன்றுமே முத்தமிழ் எனப்படுகிறது.
ஒரு மொழியை இசை, நாடகத்துடன் இணைத்து பார்க்கும் சிறப்பு தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு.
இயற்றமிழ்
முத்தமிழில் முதலாவதாக இருப்பது இயற்றமிழாகும். இயற்றமிழ் என்பது இலக்கணத்துடன் கூடியது ஆகும்.
இயல்பாக பேசவும், எழுதப்பட கூடியதால் இது இயற்றமிழ் எனப்படுகிறது. காதல், போர், சமூகம், வாழ்க்கை போன்ற பல விஷயங்கள் சங்ககாலத்திலிருந்தே எழுத்து வடிவில் இருக்கின்றது.
இசைத்தமிழ்
இசை என்னும் சொல்லுக்கு இசைவிப்பது, ஆட்கொள்வது என பல பொருள்கள் உண்டு.
இசை என்பது மக்கள் மனதை வயப்படுத்துகிறது. இசையில் வரும் இனிய ஒலிகள் நம் செவி வழியே புகுந்து, இதயத்தை வருடி மனதை மயக்கும் வல்லமை வாய்ந்தது.
இசையின் மூலம் நம் பண்பாடு, கலாசாரம், வாழ்க்கை முறைகள் போன்றகள் சங்க காலம் முதலே சொல்லப்பட்டு வருகின்றது.
நாடகத்தமிழ்
இசைத்தமிழுக்கும், நாடகத்தமிழுக்கும் எப்போதும் நெருங்கிய பந்தம் உண்டு.
இன்றும் பல கிராமங்களில் திருவிழா காலங்களில் நாடகம், கூற்று போன்றவைகள் நடக்கின்றன.
தொல்காப்பியர் காலத்திலிருந்தே வள்ளி நாடகங்கள் போன்றவைகள் உள்ளதாக வரலாறுகள் கூறுகின்றன.
மேலும் நாம் சொல்லும் செய்திகளை நடிப்பு,வசனம் போன்றவைகளுடன் நடக்கும் நாடகங்கள் மூலம் மக்களை எளிதில் சென்றடைய உதவுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக