தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, September 12, 2016

விமானத்தை கண்டுபிடித்தவர்கள் இவர்கள் இல்லையா?

பறவை வானில் பறப்பதை பார்த்து நாம் ஏன் அது போல் ஒரு சாதனத்தை உருவாக்க முடியாது என்ற கேள்வி எழுந்ததன் விளைவாக 17 டிசம்பர் 1903 ஆம் ஆண்டு ஓர்வில் ரைட் மற்றும் வில்பர் ரைட் என்ற இரட்டை சகோரதர்கள் விமானத்தை உருவாக்கி உலகையே வியப்பிற்கு உள்ளாக்கிய நிகழ்வுஅனைவரும் அறிந்த ஒன்று.
இன்றைய உலக பயணங்களை விரைவாக மேற்கொள்ள உருவாக்கப்பட்ட அற்புத சாதனம்.
இது அனைவரும் அறிந்த தகவல் தான்,
ஆனால் விமானத்தை இவர்களுக்கு முதலே இன்னொருவர் உருவாக்கிவிட்டார் என்று வரலாற்று சான்றுகளுடன் சிலர் கூறுகின்றனர்.
நியூசிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் பியர்ஸ் (Richard Pearce ) என்ற இயந்திரவியலாளர் 31 மார்ச் 1903 ஆம் ஆண்டு முதலாவது விமானத்தை பரிசோதித்துள்ளார்.
ஆனால் அவரிடம் புகைப்பட ஆதாரங்கள் இருக்கவில்லை. மீண்டும் விமானத்தில் மாற்றங்களை செய்து 11 மே 1903 ஆம் ஆண்டு பலர் முன்னிலையில் விமானத்தை இயக்கி காட்டினார், ஆனால் அது தரையிறக்கும் போது விபத்திற்கு உள்ளாகியதில் விமானம் முற்றாக சேதமடைந்தது.
மீண்டும் அதை சரி செய்து இயக்குவதற்கு முன்னர், ரைட் சகோதரர்கள் முந்திக்கொண்டனர் இது பலரும் அறியாத ஒரு வரலாற்று தகவல்.

No comments:

Post a Comment