தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, September 12, 2016

திருமணத்திற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்

பொதுவாக நாம் பயிர்களை அறுவடை செய்வதற்கு முன் நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி நன்றாக தெரிந்து கொண்டு அறுவடை செய்தால் தான் பயிறு விளைந்து நெல்மணிகள் செல்வ செழிப்பாக இருக்கும்.
அதேபோல தான் நம்முடைய திருமண வாழ்க்கையும்.
இதனால் தான் நம் முன்னோர்கள் ’திருமணங்கள் என்பது ஆயிரங்காலத்து பயிர்’ என்று திருமணத்தையும், அறுவடையையும் ஒன்றாக ஒற்றுமைப்படுத்தி கூறியுள்ளார்கள்.
ஆண்கள் மற்றும் பெண்களின் சகிப்புத்தன்மை மற்றும் விட்டுக் கொடுக்கும் தன்மை ஆகிய இரண்டையும் பொறுத்து தான் அவர்களின் இல்லறத்தில் உள்ள வாழ்க்கை சிறப்பாக அமைகிறது.
  • பெண்கள் நிறைய பேசுவார்கள், இது அவர்களது இயல்பு. நீண்ட நேரம் ஒரே விஷயத்தை உட்கார்ந்து கேட்கும் பண்பு ஆண்களிடம் இருக்காது. இதனால் வரும் சண்டைகளை தவிர்க்க, அவர்கள் கூறுவதை கேட்டு கொள்ளும் பழக்கத்தை ஆண்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • கணவன், மனைவி இருவரும் ஒன்றாக இருக்கும் போது மொபைலை பயன்படுத்தாமல் ஒருவருக்கொருவர் மீது கவனம் செலுத்தி மனம் விட்டு பேச வேண்டும். இதனால் தேவையற்ற சந்தேகங்கள், பிறகு சண்டை சச்சரவுகள் தவிர்க்கப்படும்.
  • உங்களின் திருமணத்திற்கு முன் நீங்கள் பிறந்ததில் இருந்து, உங்களது எதிர்கால திட்டங்கள் என்னென்ன, எதை எல்லாம் முயற்சி செய்தீர்கள், இது போன்ற விஷயங்களை எல்லாம் ஒருவருக்கொருவர் என ஒன்று விடாமல் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.
  • பெண்கள் நிறைய விஷயங்களை கூறுவார்கள். அவர்கள் கூறிய அனைத்தையும் நினைவில் வைத்துக் கொள்வார்கள். எனவே அவர்கள் கூறியது, நீங்கள் கூறியது என சின்ன சின்ன விஷயமாக இருப்பினும் கூட அதை இருவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • கணவன் மனைவி இருவருக்கும் அவரவர்களின் பிறந்தநாள் போன்ற சிறப்பான நாட்களை மறக்காமல் பரிசளிக்க வேண்டும். இதனால் நீங்கள் எப்போதுமே அவரை பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அவருக்கு நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும்.
  • காலை எழுந்ததும், காலை வணக்கம் கூறி ஒரு அன்பான ஆசை முத்தமும், இரவு உறங்கும் முன் ஒரு முத்தமும் இரண்டு வேளை அளித்து வந்தால், உங்கள் உறவின் அன்பு வெளிப்படும்.
  • சில நேரங்களில் வெளி இடங்களுக்கு அழைத்துச் செல்லுதல், அவர்களுக்கு பிடித்தமான விஷயங்கள், பரிசு பொருட்களை இது பொன்று இன்ப அதிர்ச்சி அளிக்க கூடிய செயல்களை செய்ய வேண்டும். இதனால் உங்கள் இல்வாழ்க்கையில் மனக்கவலைகள் உண்டாகாமல் இருக்கும்.
  • சில பேருக்கு தொட்டு பேசுவது பிடிக்காமல் கூச்சத்தன்மை இருக்கும். இந்த பழக்கங்களை திருமணத்திற்கு பின் நீண்ட நாட்கள் இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • உங்களது மனைவியின் பயத்தை போக்கி, உங்களுடன் இருக்கும் போது, இந்த உலகத்திலேயே பாதுகாப்பான இடத்தில் நாம் இருக்கிறோம் என்று உணர வேண்டும்.
  • புத்தகங்களை மட்டும் படிக்காமல், உங்களின் வாழ்க்கைப் பற்றிய படிப்பான மக்கள், உறவு, உங்கள் துணையின் மனதை என்று அனைத்தையும் படிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment