தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 12 செப்டம்பர், 2016

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்காத தாய்மார்கள் வசிக்கும் நாடு எது தெரியுமா?

சர்வதேச அளவில் பிரித்தானியா நாட்டை சேர்ந்த பெரும்பாலான பெண்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க மறுத்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவில் உள்ள Swansea பல்கலைக்கழகத்தை சேர்ந்த எமி புரவ்ன் இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
எமி வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகளவில் பிரித்தானியா நாட்டை சேர்ந்த பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை அதிகளவில் விரும்புவதில்லை’ என தெரிவித்துள்ளார்.
‘இளமைக்காலத்தில் இருந்த தோற்றத்தை அப்படியே நீடிப்பதற்கும், தங்களது அழகு மாறக்கூடாது’ என்பதால் பெரும்பாலான தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க மறுக்கின்றனர்.
வீடுகளில் மட்டுமின்றி பொது இடங்களிலும் பிரித்தானிய பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முன்வர வேண்டும் என எமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரித்தானிய நாட்டில் 200 தாய்மார்களில் ஒருவர் மட்டுமே தன்னுடைய குழந்தைக்கு 12 மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுக்கிறார். மற்றவர்கள் குறைவான மாதங்களிலேயே தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி விடுகின்றனர்.
பிரித்தானிய நாட்டிற்கு அடுத்தப்படியாக சவுதி அரேபியா, டென்மார்க் ஆகிய நாடுகளை சேர்ந்த பெண்களும் தாய்ப்பால் கொடுப்பதை தவிர்த்து வருகின்றனர்.
இதற்கு மாறாக, ஜேர்மன் நாட்டை சேர்ந்த 23 சதவிகித பெண்கள், அமெரிக்காவை சேர்ந்த 27 சதவிகித பெண்கள் மற்றும் இந்தியாவை சேர்ந்த 92 சதவிகித பெண்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு ஒரு வருடம் பூர்த்தி ஆகும் வரை தாய்ப்பால் கொடுத்து வருகிறார்கள் என எமி குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால், குழந்தை பருவத்தில் உடல்பருமன் ஆவது, தொற்றுநோய் ஏற்படுவது, நீரழிவு நோய் தாக்குவது உள்ளிட்ட நோய்களில் இருந்து காத்துக்கொள்ளலாம் என்பதால் தாய்மார்கள் அவசியம் தங்களுடைய குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக