தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 26 செப்டம்பர், 2016

பாலியல் உறவில் அளவுக்கு அதிகமான ஈர்ப்பு எதற்காக?

உலகில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று மக்களின் நாட்டத்தை திசைதிருப்பினாலும் பாலியல் உறவில் மட்டும் மக்கள் அதிக ஈர்ப்பு கொள்கின்றனர்.
இந்த பாலியல் உறவில் ஆண்களுக்கான ஈர்ப்பு, பெண்களுக்கான ஈர்ப்பு வேறு என்று கூறிவிட இயலாது.
இதில் சமூகத்தின் நிலைப்பாடு, வாழ்க்கை முறைகள் மற்றும் பள்ளிக்காலங்களில் கற்கும் கல்விமுறைகளும் ஒரு காரணம் ஆகும்.
உதாரணத்திற்கு பள்ளி செல்லும் சிறுவனுக்கு, அவனது 13 வயதில் தான் கேள்வி கேட்கும் அறிவு பலப்படுகிறது.
அந்த வயதில், பள்ளிகளில் நடத்தப்படும் இயற்பியல், வேதியியல் பாடங்களை போன்று, இனப்பெருக்கம் தொடர்பான பாடங்களையும் ஆசிரியர்கள் தெளிவான விளக்கம் அளித்துவிடவேண்டும்.
எவ்வாறு, வேதியியல் பாடங்களை அவன் கற்றுக்கொள்கிறானோ, அதுபோன்று இந்த பாடத்தையும் அவன் கற்றுக்கொண்டு, பாலியல் உறவு பற்றி தெளிவான விளக்கத்தை அறிந்துகொள்வான்.
இதனால், மாணவர்களின் வயது அதிகரிக்கையில், பாலியல் உறவு பற்றிய விளக்கம் அவர்களுக்கு தெளிவாக தெரிந்திருப்பதால், இந்த உறவினை தேடமாட்டார்கள்.
அதனை மறுத்து, மாணவர்களுக்கு நாம் கற்பிக்காமல் அதனை நீக்கும்போது தான், இரகசியமாக அதனை அறிந்துகொள்ளும் ஆர்வம் அவர்களுக்குள் மேலோங்குகிறது.
இந்த ஆர்வத்தை சரியான முறையில் கற்பித்துவிட்டால், அவர்களின் மனதில் எவ்வித தவறான எண்ணமும் இருக்காது.
இது மாணவர்கள் மட்டுமல்ல, இளைஞர்களுக்கும் பொருந்தும். இன்றளவும் இருபதுகளில் வாழ்ந்து கொண்டு, செக்ஸ் என்றால் என்ன என்ற முழு தெளிவு இல்லாமல் வாழும் நபர்கள் ஏராளம்.
இதற்கு அடுத்தபடியாக ஓன்லைனில் பரப்பப்படும் தவறான பாலியல் தகவல்கள். இதனை அரைகுறையாக படித்துவிட்டு, அதிக மோகம் கொண்டு திரிவது மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து உரையாடிதன் மூலம் கிடைக்கும் தவறான தகவல்களை அடிப்படையாக வைத்து பாலியல் உறவை தேடுகிறார்கள்.
அடிப்படையாக, பாலியல் உறவை பற்றிய தகவல்கள் இவர்களுக்கு எடுத்துக்கூறப்படாத காரணத்தினாலேயே, அதன் மீதான ஈர்ப்பு இவர்களுக்கு குறையவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக