தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, September 25, 2016

பேராதனைப் பல்கலைக்கழகம் பற்றி உங்களுக்குத் தெரியாத சில விடையங்கள்..


பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வெளியாகி விட்டன. பல்கலைக்கழகங்கள் கிடைத்தவர்கள் தமது சந்தோசத்தினை Facebook கள் மூலமாகப் பகிர்ந்திருந்தனர். கிடைத்த அனைவருக்கும் வாழ்த்துக் கூறியவனாக……
அதிலும் பேராதனைப் பல்கலைக்கழகம் கிடைக்கப் பெற்ற மாணவர்களுக்கு விசேட வாழ்த்துக்களுடன், எனது மனதில் நான் கற்ற பல்கலைக்கழகத்தினைப் பற்றி பிறர் அறிய சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
இலங்கையில் பல்கலைக்கழகம் ஒன்று தேவை என உணரப்பட்ட காலப்பகுதியில், ஆங்கிலேய ஆட்சிக் காலத்தின் இறுதிப்பகுதியில் பல்கலைக்கழகம் ஒன்றினை நிறுவுவதற்கான சிறந்த இடமொன்றைத் தேர்வு செய்ய ஒரு குழு அமைத்த போது நீதியரசர் அக்பர் அவர்களின் பரிந்துரையின் பெயரில் பேராதெனிய நகரில் தும்பர பள்ளத்தாக்கில் ஹந்தானை மலைச்சாரலில் அமைப்பதற்காக இடம் தேர்ந்தெடுக்கப் பட்டது.
இயற்கையிலேயே அழகிய சூழலையும், 18 – 30 செல்சியஸ் வரையிலான இதமான குளிருடன் கூடிய வெப்ப நிலையிலும், மகவலி ஆற்றை ஊடருத்துச் செல்லும் வகையிலும் அமைக்கப் பட்டுள்ள இந்தப் பல்கலைக்கழகம், 1942 இல் university of ceylon என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் திறந்து வைக்கும் நிகழ்விற்கு இஙகிலாந்து இளவரசி இலங்கை வந்ததும் இதன் ஒரு சிரபபம்சமே. இது இலங்கையில் முதலாவதாக அமைக்கப்பட்டதும், மிகப் பெரியதுமான பல்கலைக்கழகமாக காணப்படுகிறது. கிட்டத்தட்ட 1730 ஏக்கர்கள் ( 700 ஹெக்டயர்கள்) நிலப்பரப்பில் அமைக்கப் பட்டுள்ள இந்தப் பல்கலைக்கழகம், இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் எல்லா பீடங்களையும் ஒரே இடத்தில் அமைக்கப் பெற்றுள்ள ஒரேயொரு பல்கலைக்கழகமாகும்.
இங்கிலாந்தில் Cambridge பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற நீதியரசர் அக்பர், Cambridge பல்கலைக்கழகமானது thames நதியின் ஒரு பக்கம் பொறியியல் பீடமும், அடுத்த பக்கத்தில் ஏனைய பீடங்களும் அமைக்கப் பட்டுள்ளது. அந்தப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள முறைப்படி இங்கும் இடத்தைத் தேர்வு செய்து மகவலி ஆற்றின் ஒரு பக்கத்தில் பொறியியல் பீடத்தையும், மறு புறத்தில் ஏனைய பீடங்களையும் அமைக்கப் பரிந்துறைத்தார்.
“Garden university of srilanka” எனப் புனைப்பெயர் கொண்டழைக்கப்படும் இப் பல்கலைக்கழகம், மாணவர் கல்விக்கென பொருத்தமான சூழலொன்றில் அமையப் பெற்றுள்ள ஒரேயொரு பல்கலைக்கழகம் எனறால் அது மிகையாகாது. உலகில் காணப்படும் அழகான பல்கலைக்கழகங்களில் பேராதனைப் பல்கலைக்கழகமும் ஒன்றே. வசந்த காலங்களில் இங்கு பூக்கும் பூக்களும், எப்போதும் மிதமான வெப்பநிலையைக் கொண்டதுமான, அழகிய இயற்கைச் சூழலையும் கொண்ட இப் பல்கலைக்கழகம் 11,000 க்கும் மேற்பட்ட மாணவர்களும், 3700 கல்விசார், கல்வி சாரா ஊழியர்களையும் கொண்டமைந்துள்ளது.
தெற்காசியாவில் மிகப் பெரிய நூலகம், இலங்கையில் அனைத்துக் கலை நிகழ்ச்சிகளினதும் கன்னி நிகழ்ச்சிகளை நடாத்தும் கலையரங்கம், கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட தூண்களால் ஆன செனட் கட்டடம், 9 பீடங்கள், 15 மாணவ விடுதிகள், பல்கலைக்கழகத்திற்கென தனியான ரயில் நிலையம் என ஒரு பல்கலைக்கழக சூழலுக்குள்ளேயே அனைத்தும் அமையப் பெற்றுள்ள, தன்னகத்தே பல தனியம்சங்களைக் கொண்டது இப் பல்கலைக்கழகம், இன்னொரு வகையில் சொல்லப் போனால் ஒரு கிராமத்தையே பல்கலைக்கழகமாக அமைத்துள்ளார்கள்.
வாழநாளில் ஒரு தடவையேனும் போய்ப் பார்த்துவிட வேண்டும் என என்னும் நெஞசங்களுக்குள் அந்தப் பல்கலைக்கழகத்தில் பசுமையான நான்கு வருடங்களை வாழ்க்கையாக வாழந்து ஒரு பட்டதாரியாக வெளியேறியதில் எனக்கிருக்கும் சந்தோசம் வேறெவருக்கும் வந்து விடப் போவதில்லை…..
குறிப்பு :- சில தகவல்கள் இணையத்திலிருந்து திரட்டப்பட்டது.sri-lanka-university sri-lanka-university01 sri-lanka-university02 sri-lanka-university03 sri-lanka-university04 sri-lanka-university05 sri-lanka-university06 sri-lanka-university07 sri-lanka-university08 sri-lanka-university09 sri-lanka-university10


No comments:

Post a Comment