வெந்தய கீரை கசப்பாக இருப்பதால் இதை எல்லோரும் அதிகமாக உட்கொள்வதில்லை.
வெந்தய கீரையில் கலோரி, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து, மாவுச்சத்து, நீர்ச்சத்து, புரதம், கொழுப்புச்சத்து மற்றும் விட்டமின் C போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.
- வெந்தயக் கீரையை தொடர்ந்து உங்கள் உணவுப் பழக்கத்தில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறையும்.
- இடுப்பு வலி குணமாவதற்கு வெந்தயக் கீரையுடன் நாட்டுக் கோழி முட்டையின் வெள்ளை கரு, தேங்காய் பால், கசகசா, சீரகம், மிளகு, பூண்டு ஆகியவற்றை சேர்த்து அதனுடன் சிறிதளவு நெய் கலந்து சமைத்து சாப்பிட்டால் இடுப்பு வலி காணாமல் போய்விடும்.
- வெந்தயக் கீரையை தினமும் சமைத்து சாப்பிட்டால் கபம், சளி போன்ற நோய்கள் விரைவாக குணமடையும்.
- சுறுசுறுப்பு தன்மையற்று மந்த நிலமையை உணர்பவர்கள் அல்லது உடல் சோர்வுத் தன்மையை உணர்பவர்கள் வெந்தயக் கீரை தினமும் சமைத்து சாப்பிட்டால், உடலின் செயலாற்றல் அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க முடியும்.
- வெந்தயக் கீரையை நம் அன்றாட உணவில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.
- நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு வெந்தயக் கீரை ஓர் சிறந்த மருந்தாகும், இது நரம்பு தளர்ச்சியில் இருந்து விடுபட வைக்கிறது.
- வயிற்று வலி, உப்புசமாக உணர்தல், வயிற்று எரிச்சல் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளை குணமாக்க வெந்தயக் கீரை உதவுகிறது.
- வெந்தயக் கீரை குளிர்ச்சி தன்மையை தருவதால் உடல் சூடு அதிகமாக உள்ளவர்கள், வெந்தயக் கீரை சாப்பிடுவதால் உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியைத் தருகிறது.
- வெந்தயக் கீரையை உணவுப் பழக்கத்தில் சேர்த்துக் கொள்வதனால் மார்புவலி, தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக