அமெரிக்காவில் இலக்கிய ஆர்வத்தை ஊக்குவிப்பதற்காக பள்ளி மாணவர்களில் இருந்து இளம் கவிஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் தேசத்தின் இலக்கிய தூதுவர்களாக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட மாயா ஈஸ்வரன் உள்ளிட்ட ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் வெள்ளை மாளிகையில் 8.9.2016 வியாழக்கிழமை கவிதை வாசித்தனர்.
மாயா ஈஸ்வரன் தனது ஆங்கிலக் கவிதையில்:
’கடந்த 16 ஆண்டுகளாக நான் இழந்த பலவற்றைவிட மிக முக்கியமான ஒன்றை நான் தொலைத்து விட்டேன். தலைமுடி உதிர்வதைப்போல் எனது இனத்தின் அடையாளத்தை நான் உதிர்த்துக் கொண்டிருக்கிறேன்.
நான் எனது தாய்மொழியான தமிழைப்பேசி மூன்றாண்டுகள் ஆகின்றன. தாயே!, வெகுவிரைவில் நான் வழுக்கைத் தலையாகி விடுவேனோ? என்று அஞ்சுகிறேன்’ என்று வாசித்தார்.
தாய்மொழியான தமிழ்ப்பற்று தொடர்பான தனது கவிதையை மாயா வாசித்து முடிப்பதற்குள் அந்த கவியரங்கத்தில் இருந்த அனைவரும் உணர்ச்சிப்பெருக்கில் நெகிழ்ச்சியடைந்து, பலத்த கரவொலி எழுப்பி பாராட்டினர்.
அமெரிக்க அதிபரின் மனைவி மிஷேல் ஒபாமாவும், மேடையில் இருந்தபடியே மாயாவின் கவிதையைப் பாராட்டும் விதமாக உரத்தக் குரல் எழுப்பினார். பின்னர் அவர், ‘‘மாயா, எங்கே மாயா? சிறந்த கவிதை வாசித்துள்ளாய். மேடையில் உள்ள அத்தனைப் பேரையும் கவர்ந்து விட்டாய்’’ எனப் புகழாரம் சூட்டினார்.
நிகழ்ச்சிக்குப்பின் மாயா தனது பேட்டியில், ‘‘நான் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவள். ஆனால் பிறந்தது அமெரிக்காவில். எனது கலாச்சாரம், தொன்மை, பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு கவிதைகளை எழுதியிருக்கிறேன். எனது தாய்மொழியை எப்படி இழந்தேன் என்ற அனுபவத்தைத் தான் வெள்ளை மாளிகையில் கவிதையாக மொழிபெயர்த்துக் கூறினேன். தாய்மொழியை மறந்து விட்டு, பிறமொழியை மாற்றாக ஏற்றுக் கொள்வது என்பது மிகுந்த வலி நிறைந்தது’’ என்றார்.
மேற்கு மத்திய பகுதி (Midwest), தென்கிழக்கு (Southeast), தென்மேற்கு (Southwest), வட கிழக்கு (Northeast), மேற்கு (West) – என அமெரிக்காவின் ஐந்து பகுதிகளின் பிரதிநிதிகளாக ஐந்து இளம் கவிஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில், மாயா ஈஸ்வரன் (தென்கிழக்கு),கோபால் ராமன் (தென்மேற்கு) ஆகிய இருவரும் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மொழி: தமிழ்நாட்டில் மாபெரும் இனஅழிப்பு சதி
திராவிட ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டுக்கு செய்த கேடுகளில் உச்சமானது, தமிழ் குழந்தைகள் மீது “ஆங்கில வழிக் கல்வியை” திணித்ததுதான். இதனை தொடங்கியவர் எம்ஜிஆர். தொடர்ந்தவர்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும்.
ஆங்கில மொழியை கற்பதற்கும் ஆங்கில வழியில் கற்பதற்கும் உள்ள வேறுபாடு புரியாதவாறு குழப்பி – தமிழ்நாட்டிலிருந்து தமிழை ஒழிக்கும் வேலையை திராவிட ஆட்சியாளர்கள் மிகத்திறமையாக செய்துவிட்டனர். மொழியறிவு குறித்த அடிப்படை புரிதல் இல்லாத தமிழக நடுத்தர வகுப்பு மக்கள் இக்குற்றத்திற்கு ஆதரவு அளிக்கின்றனர்.
இது ஒரு இன அழிப்பு சதி ஆகும். இந்த பேரழிவின் பாதிப்புகள் எதிர்காலத்தில்தான் தெரியவரும்!
- See more at: http://www.canadamirror.com/canada/69668.html#sthash.b3wyKBiQ.CCczSFYl.dpuf
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக