தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, May 4, 2017

உண்மையான பாகுபலி மகிஸ்மதி நகரம் இங்கதான் இருக்கிறதாம்?? !!

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா நடிப்பில் வெளியாகி இருக்குற படம் பாகுபலி 2. கட்டப்பா பாகுபலிய ஏன் கொன்னாரு? பாகுபலிக்கும் அனுஷ்காவுக்கும் எப்படி காதல் மலர்ந்ததுனு பல விசயங்கள் வெளியாகியிருக்கு இந்த படத்துல. அதே நேரத்தில் இன்னொரு விசயம்
பாகுபலி படத்தில் காட்டப்பட்ட மகிஸ்மதி நகரம் உண்மையில் இருந்திருக்கிறது தெரியுமா.... அதன் அழிவுக்கு காரணம் யார் தெரியுமா?
பாகுபலி ஆண்ட மகிஸ்மதி
பாகுபலி என்னும் வீர தீர பராக்கிர மன்னன் மகிஸ்மதி என்னும் சொர்க்க பூமியை ஆண்டு வருகிறான். அவனுக்கு போட்டியாக வருவது வேறு யாரும் அல்ல அவன் சகோதரன்தான்.
பாகுபலியின் மகிஸ்மதி எங்கே இருக்கிறது தெரியுமா?
பாகுபலி மன்னன் ஆண்ட மகிஸ்மதி எங்கிருக்கிறது என்று படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளால் கூறியிருப்பார்கள். ஆனால் இந்த மகிஸ்மதி நகரம் மத்திய இந்தியாவில் அமைந்துள்ளது. பழமையானநகரான இது அவந்தி பேரரசின் கீழ் இருந்துள்ளது.
வரலாற்று சான்றுகளின்படி மகிஸ்மதி ஒரு பெரிய நகரம். இது தற்போதைய இந்தியாவின் நடுப் பகுதியில் அமைந்திருக்கிறது. விந்திய மலைகளால் பிளவு
விந்திய மலைகளால் பிளவுபட்ட அவந்தி தேசம், வடக்கில் உஜ்ஜையினியையும், தெற்கில் மகிஸ்மதியையும் தலைநகராகக் கொண்டிருந்தது,.
காளகேயர்கள் உண்மையில் இருக்கிறார்களா?
காளகேயர்கள் என பாகுபலி படத்தில் குறிப்பிடப்பட்டவர்கள் கைகாயர்களா என்ற சந்தேகம் இருக்கிறது. அதற்கு காரணம் இல்லாமல்இல்லை.
இது காளகேயர்கள் என்னும் ( பாகுபலியில்) கைகாயர்கள் ஒரு காலத்தில் அதிரும் படையுடன் அவர்கள் எங்கு சென்றாலும் அந்த நாட்டை அடிமைப்படுத்திவிடுவார்களாம்.
நடு மற்றும் மேற்கு இந்தியாவில் ஆட்சி
கைகாயர்கள் நடு மற்றும் மேற்கு இந்தியாவின் பல பகுதிகளை ஆட்சி செய்துள்ளனராம். அவற்றில் ஒன்று தான் இந்த மகிஸ்மதி நகரம்.
பட்டாச்சார்யாவின் சாட்சி
பிகே பட்டாச்சார்யா அவரது மத்திய பிரதேச வரலாறு என்னும் நூலில் இந்த மகிஸ்மதியை பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில் அர்ஜூனன் மகிஸ்மதியில் இருந்துகொண்டு மொத்த உலகத்தையும் ஆட்சி செய்தான் என குறிப்பிட்டுள்ளார்.
தற்காலத்தில் எங்குள்ளது மகிஸ்மதி
இந்த மகிஸ்மதி ராஜ்ஜியம் என்பது மிகவும் பரந்தது. அதனை சிலர் தற்போதைய மைசூருடன் ஒப்பிடுகின்றனர். பாகுபலி படத்திஸ் மகிஸ்மதியையும், மைசூரையும் ஒப்பிடும்போது பல விசயங்கள் ஒத்தப்போகின்றன.
மைசூர் தான் மகிஸ்மதி என்று தற்காலத்தில் பல வரலாற்று ஆய்வாளர்கள் கூறினாலும், மகிஸ்மதி என்ற பகுதி மத்திய இந்தியாவில்தான் இருக்கிறது என்றும் சிலர் அடித்து கூறுகின்றனர். அவர்கள் ஆதாரமாக கூறுவது ராமாயண புராணம்..
- See more at: http://www.manithan.com/news/20170502126799?ref=youmaylike3#sthash.V63bVId0.dpuf

No comments:

Post a Comment