தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, March 20, 2017

இரட்டை பிராஜாவுரிமை பெறுவதற்கு நீங்கள் தகுதியானவரா?

1948ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க குடியுரிமை சட்டத்தின் 19, 20 மற்றும் 21 ஆம் பிரிவுகளின் கீழ் இலங்கை பிரஜாவுரிமையை இழந்த ஒருவருக்கு அல்லது அண்மையில் இழக்கவுள்ள ஒருவருக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
19.2 பிரிவின் ஒழுங்குவிதி மூலம் பிறிதொரு நாட்டின் பிரஜாவுரிமையை பெற்றுக்கொண்ட காரணத்தினால் இலங்கை பிரஜாவுரிமை இழக்கப்பட்ட ஒருவருக்கு,
19.3 பிரிவின் ஒழுங்குவிதி மூலம் பிறிதொரு நாட்டின் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொள்ளவுள்ள காரணத்தினால் இலங்கை பிரஜாவுரிமை இழக்கப்படும் ஒருவருக்கு மட்டும் இரட்டை பிரஜாவுரிமை வழங்கக் கோரி விண்ணப்பிக்க முடியும்.
இரட்டை பிரஜாவுரிமை பெற விண்ணப்பிப்பதற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
  • விண்ணப்பதாரரின் பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி அல்லது சான்றுப்படுத்தப்பட்ட நகல் பிரதி
  • விண்ணப்பதாரர் திருமணமானவராயின் திருமணச் சான்றிதழின் மூலப்பிரதி அல்லது அதன் சான்றுபடுத்தப்பட்ட நகல் பிரதி
  • இரட்டை பிரஜாவுரிமைக்காக விண்ணப்பிப்பவர் குடியுரிமை சட்டத்தின் 19(2) பிரிவின் கீழ் இலங்கை பிரஜாவுரிமையை இழந்த ஒருவராயின், அவர் பின்வரும் ஆவணங்ளை சமர்ப்பித்தல் வேண்டும்.
  1. வெளிநாட்டுப் பிரஜாவுரிமை சான்றிதழ் அல்லது சான்றுபடுத்தப்பட்ட நகல் பிரதி
  2. தற்போது பிரஜாவுரிமையை கொண்டுள்ள நாட்டின் கடவுச்சீட்டின் தரவுப்பக்கத்தினதும் உரிய திருத்தங்களிற்கான பக்கங்களின் நகல் பிரதிகளும்.
  3. விண்ணப்பதாரர் தற்போது பிரஜாவுரிமையை கொண்டிருக்கும் நாட்டிலிருந்து பெற்றுக்கொண்ட போலீஸ் அனுமதி சான்றிதழ் (உரிய சான்றிதழ் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும் தினத்திற்கு 3 மாதங்களினுள் பெற்றுக்கொள்ளப்பட்ட ஆங்கில மொழியில் அமைந்தாக இருக்க வேண்டியதுடன் அவ்வாறு ஆங்கில மொழியில் அமைந்திராவிடின் அதற்குரிய ஆங்கில மொழிபெயர்ப்புடன் சமர்ப்பிக்கவும்)
  4. இலங்கை கடவுச்சீட்டின் தரவுப்பக்கத்தினதும் உரிய திருத்தங்களிற்கான பக்கங்களின் சான்றுபடுத்தப்பட்ட நகல் பிரதிகளும் (உரிய கடவுச்சீட்டு காணப்படுமாயின் மட்டும்)
அல்லது,
  • இரட்டை பிரஜாவுரிமைக்காக விண்ணப்பிப்பவர் குடியுரிமை சட்டத்தின் 19(3) பிரிவின் கீழ் இலங்கை பிரஜாவுரிமையை இழக்கவுள்ள ஒருவராயின், அவர் பின்வரும் ஆவணங்ளை சமர்ப்பித்தல் வேண்டும்.
  1. தற்போதுள்ள இலங்கை கடவுச்சீட்டின் தரவுப்பக்கத்தினதும் உரிய திருத்தங்களிற்கான பக்கங்களின் சான்றுபடுத்தப்பட்ட நகல் பிரதிகளும்
  2. நிரந்தர வதிவிட வீசாவின் சான்றுபடுத்தப்பட்டப் பிரதி
  3. விண்ணப்பதாரர் தற்போது நிரந்தர வதிவிட வீசாவினைக் கொண்டிருக்கும் நாட்டிலிருந்து பெற்றுக்கொண்ட போலீஸ் அனுமதி சான்றிதழ் (உரிய சான்றிதழ் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும் தினத்திற்கு 3 மாதங்களினுள் பெற்றுக்கொள்ளப்பட்ட ஆங்கில மொழியில் அமைந்தாக இருக்க வேண்டியதுடன் அவ்வாறு ஆங்கில மொழியில் அமைந்திராவிடின் அதற்குரிய ஆங்கில மொழிபெயர்ப்புடன் சமர்ப்பிக்கவும்)
  • விண்ணப்பதாரர் 55 வயதினை பூர்த்தி அடைவதின் காரணமாக இரட்டை பிரஜாவுரிமைக்காக விண்ணப்பிப்பதாயின் (1.A இன் கீழ்) விண்ணப்பதாரரின் பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி அல்லது உறுதிப்படுத்தப்பட்ட நகல் பிரதி
  • தொழில் தகைமை / கல்வித்தகைமை (1.B இன் கீழ்) காரணமாக விண்ணப்பிப்பதாயின் உரிய கல்வி அல்லது தொழில் தகைமைக்கு உரிய சான்றிதழ்களின் அல்லது அவற்றின் சான்றுபடுத்தப்பட்ட நகல் பிரதிகள். (ஆகக் குறைந்தது 01 வருடத்திற்கு மேற்பட்ட டிப்ளோமா பாடநெறியினைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். அதற்கு மேற்பட்ட வேறு கல்வி மற்றும் தொழில் தகைமைகள் கருத்திற் கொள்ளப்படும்)
  • இலங்கையிலுள்ள 2.5 மில்லியன் ரூபாய்களுக்கு மேல் பெறுமதியான அசையா சொத்தினைக் கொண்டுள்ள காரணத்தினால் (1.C இன் கீழ்) விண்ணப்பிப்பதாயின் உரிய நிலையான சொத்துக்களின் ஆவணங்களின் சான்றிதழ்களின் மூலப்பிரதிகள் அல்லது சான்றுபடுத்தப்பட்ட நகல் பிரதிகள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். இங்கு உரிய சொத்துக்களின் விலை மதிப்பு அறிக்கை, சொத்துக்களின் கிரயச்சான்றிதழ் மற்றும் உரித்துரிமை சான்றிதழ் என்பன சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
  • 2.5 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையினை இலங்கை மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட ஏதேனுமொரு வர்த்தக வங்கியொன்றில் 3 வருட காலத்திற்கு வைப்பிலிடுவதன் மூலம் விண்ணப்பிப்பதாயின் (1.D இன் கீழ்) உரிய வங்கியிலிருந்து 3 வருட காலத்திற்கு வைப்புப்பணம் மீள செலுத்தப்பட மாட்டாது என உறுதிப்படுத்தப்பட்டு பெற்றுக்கொள்ளப்ப்பட்ட சான்றிதழ் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
  • இலங்கை மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட ஏதேனுமொரு வர்த்தக வங்கியொன்றில் NRFC/RFC/SFIDA கணக்கில் 25000 அமெரிக்க டொலர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையினை 3 வருட காலத்திற்கு வைப்பிலிடுவதன் மூலம் விண்ணப்பிப்பதாயின் (1.E இன் கீழ்) உரிய வங்கியிலிருந்து 3 வருட காலத்திற்கு வைப்புப்பணம் மீள செலுத்தப்பட மாட்டாது என உறுதிப்படுத்தப்பட்டு பெற்றுக்கொள்ளப்ப்பட்ட சான்றிதழ் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
  • விண்ணப்பதாரர் திறைசேரி உண்டியல்கள் (TB) அல்லது பாதுகாப்பு வைப்பு நிதியில் (SIA) 25000 அமெரிக்க டொலர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையினை 3 வருட காலத்திற்கு வைப்பிலிடுவதன் காரணமாக விண்ணப்பிப்பதாயின் (1.F இன் கீழ்) உரிய சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
  • விண்ணப்பப்படிவத்தின் இல. 1 இல் கூறப்பட்ட A தொடக்கம் F வரையுள்ள தகைமைகளினை பூரணப்படுத்தியுள்ள விண்ணப்பதாரரின் வாழ்க்கைத்துணை ஒருவர் அல்லது அவரது 22 வயதுக்கு குறைந்த திருமணமாகாத பிள்ளை காரணமாக விண்ணப்பிப்பதாயின் (1.G இன் கீழ்) பின்வரும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
i. வாழ்க்கைத்துணைக்கு திருமணச் சான்றிதழின் மூலப்பிரதி அல்லது அதன் சான்றுபடுத்தப்பட்ட நகல் பிரதி
i. 22 வயதுக்கு குறைந்த திருமணமாகாத பிள்ளைக்கு,
Ø பிள்ளை இலங்கையில் பிறந்திருப்பின் பிள்ளையின் பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி அல்லது அதன் சான்றுபடுத்தப்பட்ட நகல் பிரதி
Ø பிள்ளை இலங்கைக்கு வெளியே வேறு நாட்டில் பிறந்திருப்பின் குடியுரிமைச் சட்டத்தின் 5(2) பிரிவின் கீழ் விநியோகிக்கப்பட்ட பிரஜாவுரிமை சான்றிதழின் மூலப்பிரதி அல்லது அதன் சான்றுபடுத்தப்பட்ட நகல் பிரதி
இங்கு வாழ்க்கைத்துணை அல்லது 22 வயதுக்கு குறைந்த திருமணமாகாத பிள்ளைக்கு இரட்டை பிரஜாவுரிமை பெற விண்ணப்பிப்பதற்கு அவர் 1948ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க குடியுரிமை சட்டத்தின் 19,20 மற்றும் 21ஆம் பிரிவுகளின் கீழ் இலங்கை பிரஜாவுரிமையை இழந்த ஒருவராக அல்லது இழக்கப்படுவதற்கு உள்ள ஒருவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிக்கும் முறை
உரியவாறு பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை விண்ணப்பதாரர் இத்திணைக்களத்திற்கு சமூகமளித்து குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திடம் நேரடியாகவோ அல்லது விண்ணப்பதாரர் வெளிநாடொன்றில் வசிப்பின் தான் பிரஜாவுரிமை பெற்றுள்ள நிரந்தர வதிவிட வீசா கொண்டுள்ள நாட்டின் இலங்கை துhதரகத்தில் சமர்ப்பிக்கலாம்.
வெளிநாட்டுத் தூதரகங்களில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பப்படிவங்களும் அதற்கு இணைக்கப்பட்டுள்ள சான்றிதழ்களின் பிரதிகளும் (இல. 3 இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களின்) வெளிநாட்டுத் தூதரக பிரதானி அல்லது அல்லது அவரினால் அதிகாரம் அளிக்கப்பட்ட தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் அல்லது அதற்கு மேற்பட்ட சிரேஷ்ட அதிகாரி ஒருவரினால் சான்றுப்படுத்தப்பட வேண்டும்.
குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பப்படிவங்களும் அதற்கு இணைக்கப்பட்டுள்ள சான்றிதழ்களின் பிரதிகளும் பிரஜாவுரிமைப் பிரிவின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் அல்லது உதவிக் கட்டுப்பாட்டாளரினால் சான்றுப்படுத்தப்படும்.
திணைக்களத்தின் முகவரி
குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம்,
(பிரஜாவுரிமைப் பிரிவு),
"சுகுறுபாய",
பத்தரமுல்லை.
இலங்கை.
மின்னஞ்சல்- accit@immigration.gov.lk
விண்ணப்பப்படிவங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள்
  1. பிரதான விண்ணப்பதாரர்ர - 300,000ரூபா
  2. வாழ்க்கைத்துணை - 50,000ரூபா
  3. 22 வயதுக்குக் குறைந்த திருமணமாகாத பிள்ளைகளுக்கு - 50,000ரூபா
சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பப்படிவங்கள் பரிசீலனை செய்யப்பட்டு விடயத்திற்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சருக்கு விண்ணப்பப்படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்டு உரிய அனுமதியினைப் பெற்றுக்கொண்ட பின்னரே மேற்குறிப்பிடப்பட்டுள்ளவாறு கட்டணங்கள் அறவிடப்படும்.

உரிய கட்டணங்கள் செலுத்தப்படுவது தொடர்பாக திணைக்களத்தினால் விண்ணப்பதாரருக்கு அறிவிக்கப்பட்டபடும். இதன் பின்னர் கட்டணங்கள் செலுத்தப்படல் வேண்டும்.

No comments:

Post a Comment