தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, May 5, 2018

இந்த மூன்றில் உங்க ராசி இருக்கா? காதல்லாம் ஒத்து வராதாம் !!


இளமை காலத்தில் காதல் என்ற விடயத்தை கடக்காதவங்க யாருமே இருக்க மாட்டாங்க. ஆனாலும் இந்தக் காதல் அப்படினா என்னன்னே தெரியாம சிலர் இருக்கதான் செய்யறாங்க.
கல்யாணத்துக்கு அப்பறம் பார்த்துக்கலாம்னு இருக்காங்களோ என்னவோ.
சரி உலகத்தையே கட்டி வச்சிருக்குற இந்த காதல் யார் யாருக்கு ஒத்து வராதுனு பார்ப்போம் வாங்க.
ஜோதிடத்தின் படி இப்போ சொல்ல போற ராசிக்காரங்களுக்கு திருமணத்துல விருப்பமே இருக்காதாம். இதனோட உண்மை தன்மையை அந்தந்த ராசிக்காரர்களே பார்த்து முடிவு பண்ணிக்குங்க.

மேஷம்
இவங்க தங்களுக்குன்னு சில விதிமுறைகள் வச்சுக்கிட்டு வாழறவங்க. இப்படித்தான் வாழணும்னு நினைச்சு வாழற இவங்க சுதந்திரமாவும் வாழ விரும்பறவங்க.
இவங்கள அவ்வளவு சீக்கிரம் சமரசம் செய்ய முடியாதாம். இவங்க கருத்துக்கு மாறா யார் எது சொன்னாலும் தங்களை மாத்திக்கவும் மாட்டார்களாம். இவங்களுக்கு காதலோ கல்யாணமோ அவ்வளவு சீக்கிரம் நடக்காது.

ஏன்னா மத்தவங்களோட கருத்துக்களையோ விருப்பங்களையோ இவங்களால எளிதில் புரிஞ்சுக்க முடியாது. அதே நேரத்துல இவங்களுக்கு பிடிக்காத விஷயத்தை யார் செஞ்சாலும் அவங்கள விட்டு இவங்க விலகி போகவும் தயங்க மாட்டாங்க. இதனாலேயே இவங்க உறவுமுறைகள் ல ஈடுபாடு காட்ட மாட்டாங்க. அப்படியே ஈடுபட்டாலும் அது நிலைக்கறதும் இல்ல.

மிதுனம்
மிதுன ராசிக்காறங்க நட்பு உணர்ச்சி அதிகம் உள்ளவர்களா இருப்பாங்க. கலகலப்பா பேசுவாங்க ஆனா இவங்க யாரையும் சார்ந்து தன வாழ்க்கையை அமைச்சுக்க மாட்டாங்க.
இவங்க மத்தவங்க கூட நேரம் செலுத்த விரும்புவாங்க. ஆனால் நிரந்தரமான வாழ்க்கை துணையோடு நேரம் செலுத்தி வாழ இவங்க விரும்ப மாட்டாங்க. மிகவும் நேர்மையான இவங்கனால சில சமயம் மத்தவங்க மனக்கஷ்டத்திற்கும் ஆளாவாங்க.

இவங்க உற்சாகமானவங்க மேலும் ஆளுமை குணமும் உள்ளவங்க ஆனா திருமண பந்தத்துக்குள்ள நுழைய அவ்வளவு எளிதில் விரும்ப மாட்டாங்க.
இவங்க சுதந்திரத்த விரும்பறவங்க அதனால திருமணம் செய்தால் சுதந்திரம் பறிபோய்டும்னு இவங்க யோசிப்பாங்க.

கும்பம்
இவங்க தங்களோட உணர்வுகளை வெளியே காட்டிக்கவே மாட்டாங்க. ஒரு உறவில் இருக்கும்போது இவங்களோட உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாம சிரமப்படுவாங்க.
ஆரம்ப காலத்துல இவங்களோட உணர்வுகளை மத்தவங்க புரிஞ்சுக்கிட்டாலும் சில காலம் ஆனதும் இந்த ராசிக்காரங்க தங்களோட உணர்வுகளை எதிலும் வெளிப்படுத்தாம ஜடம் போல ஆய்டுவாங்க.

இவங்க தங்களுடைய உணர்வுகளை தங்களோட கட்டுப்பாட்டுக்குள்ளயே அடக்கி வச்சிருப்பாங்க. ஒரு உறவுன்னு வரப்போ பரஸ்பரம் உணர்வுகளை வெளிகாட்டிக்கறதுதான் மற்றும் வெளிப்படையா இருக்கறதாலயும்தான் அந்த உறவு வலுப்பட ஆரம்பிக்கும். அப்படி வெளிக்காட்டப்படாத உணர்வுகள் நாளடைவில் விரிசல்களை தான் ஏற்படுத்தும்.
மேலே குறிப்பிட்ட அந்தந்த ராசிகாரங்க அவங்க அப்படிதானான்னு நேர்மையா ஒரு சுயபரிசோதனை செய்து பாருங்க. உங்க பலவீனங்களை சரி செஞ்சுக்குங்க. அதுக்கப்புறம் காதல்ங்கற அதிசயம் உங்களுக்கும் வசப்படும்.

http://news.lankasri.com/astrology/03/177978?ref=ls_d_others

No comments:

Post a Comment