தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, May 24, 2018

இந்த பானம் முதுமையைத் தடுக்கும் என்பது தெரியுமா?


நோயில்லாத வாழ்வை வாழ ஆசைப்படுபவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள், பானங்களின் உதவி அவசியம்.
அதிலும் இளநீருடன் தேனைக் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால், அது பல்வேறு உடல் ஆரோக்கிய பிரச்சனைகளை சரிசெய்யும்.
ஒரு டம்ளர் இளநீரில் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து கொள்ள வேண்டும். இந்த பானத்தை தினமும் காலையில், உணவு உண்பதற்கு முன் குடிக்க வேண்டும்.
பொதுவாக முதுமையை ஒருவரால் தடுக்க முடியாது. ஆனால் முதுமைத் தோற்றத்தை ஒருவரால் தள்ளிப் போட முடியும்.
தேன் மற்றும் இளநீரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், செல்கள் சிதைவுறுவதை தாமதப்படுத்தி, முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போடும்.
காலையில் எழுந்தும் இளநீரில் தேன் கலந்து குடித்து வந்தால், அது நாள் முழுவதும் உடலின் ஆற்றலை சிறப்பாக வைத்திருப்பதோடு, இந்த பானத்தில் பொட்டாசியமும் அதிகமாக உள்ளது.
இந்த பானம் செரிமான பிரச்சனைகளான வயிற்று வலி, இரைப்பை அழற்சி, வயிற்று உப்புசம், அசிடிட்டி போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.
மேலும் இந்த பானம் வயிற்றில் சுரக்கும் அதிகப்படியான அமில அளவை நீர்க்கச் செய்து, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
இளநீரில் தேன் கலந்து குடித்து வந்தால், அது சிறுநீரக கற்களைத் தடுப்பதோடு, அதை கரைத்து எளிதில் வெளியேற்றிவிடும்.
இளநீருடன் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால், அது இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து, சர்க்கரை நோயைத் தடுப்பதாக தெரிய வந்துள்ளது.

http://news.lankasri.com/health/03/179494?ref=ls_d_lifestyle

No comments:

Post a Comment