தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, May 7, 2018

இந்த ரேகை உங்களுக்கு இருக்கா? அப்போ நீங்க...?


கைரேகை ஜோதிடத்தின் படி, ஒருவரின் கையில் உள்ள ஒருசில ரேகைகள் நாம் பணக்காரர் மற்றும் அதிர்ஷ்டசாலி என்பதைக் கூறுகிறது. அதை பற்றி காண்போம்.
நேரான ரேகை
உள்ளங்கையில் உள்ள கோடுகளில் ஒரு நேர்க்கோடு இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் பணக்காரராக இருப்பார்கள் என்று அர்த்தம்.

மேடுகள்
கையில் வீனஸ் மற்றும் சனி மேடுகள் சற்று மேலே எழுந்து காணப்பட்டால், அவர்கள் வாழ்வில் எதிலும் வெற்றி காண்பதோடு, செல்வந்தர் ஆகும் வாய்ப்பும் உள்ளது என்று அர்த்தம்.

ஆமை குறி
உள்ளங்கையில் ஆமை வடிவக் குறி இருந்தால், அது பணக்காரர் ஆகும் வாய்ப்பு இருப்பதையும், எதிலும் வெற்றியை அடைவார் என்பதையும் குறிக்கும்.

ஸ்வஸ்திக் சின்னம்
ஒருவரது கையில் ஸ்வஸ்திக் சின்னம் இருந்தால், அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாவர். அது அவர்களை நோக்கி செல்வத்தை ஈர்ப்பதோடு, பணியில் வெற்றியாளராக விளங்குவார்கள்.

வெள்ளை மச்சம்
உள்ளங்கையில் வெள்ளை நிறத்தில் மச்சம் இருந்தால், அது அவர்களது அதிர்ஷ்டத்தை குறிப்பது. அதுவும் அந்த மாதிரியான வெள்ளை மச்சம் கொண்டவர்கள் பணக்காரர் ஆகும் வாய்ப்பு நிறைய உள்ளதாம்.

உயர்ந்த ரேகைகள்
உள்ளங்கையில் உள்ள அனைத்து ரேகைகளும் சற்று உயர்ந்து இருப்பதோடு, அவற்றின் வரிகள் சுத்தமானவையாகவும், நடுவில் உடைக்கப்படாமலும் இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் வெற்றிகரமாக இருப்பார்கள் என்று அர்த்தம்.

இரண்டு விதி ரேகைகள்
ஒருவரின் கையில் 2 விதி ரேகைகள் இணையாக இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றும், அவர்கள் நிறைய பணம் சம்பாதிப்பார்கள் என்பதை குறிக்கிறது.

சனி மேடு
ஒருவரின் கையில் சனி மேட்டில் சக்கர அடையாளம் இருந்தால், அவர்கள் வாழ்க்கையில் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றும், அவர்கள் நிறைய பணம் சம்பாதிப்பார்கள் என்பதை குறிக்கிறது.

அதிர்ஷ்ட ரேகை
ஒருவரின் கையில் அதிர்ஷ்ட ரேகை மணிக்கட்டு வரை நீட்டிக்கப்பட்டிருந்தால், அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று அர்த்தம்.
அதுவும் அதிர்ஷ்ட ரேகை, விதி ரேகை வழக்கத்தை விட நீளமாக இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் அதிர்ஷ்டசாலி என்பதை குறிக்கிறது.

ஆள்காட்டி விரல்
விதி ரேகை சனி மேடு வரை நீட்டிக்கப்பட்டு, ஆள்காட்டி விரல் வரை இணைக்கப்பட்டிருந்தால், அது ஒருவரின் வாழ்வில் வெற்றிகரமானவராக இருப்பார்கள் என்று அர்த்தம்.

பெருவிரல் ரேகை
பெருவிரலின் அடிப்பகுதியில் இருந்து தொடங்கி, சனி மேடு வரை ரேகை சென்றால், அவர்கள் வாழ்க்கையில் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று அர்த்தம்.

உள்ளங்கை ரேகை
உள்ளங்கையில் இருந்து ரேகை ஏதேனும் தொடங்கினால், அத்தகையவர்கள் திடீர் பணக்காரர் ஆகும் வாய்ப்புள்ளது என்று அர்த்தம்.

விதி ரேகை
ஒருவரின் கையில் சனி மேட்டிற்கு அருகே விதி ரேகையின் பிளவு ஏற்பட்டிருந்தால், அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று அர்த்தம்.

http://news.lankasri.com/lifestyle/03/178146?ref=ls_d_lifestyle

No comments:

Post a Comment